Sunday, September 3, 2017


''அந்த மூன்று நாட்கள் ''

நான் எதிர்பார்ப்பதெல்லாம்
உன்  அன்பையும் அரவணைப்பையும்
அந்த மூன்று நாட்கள் மட்டுமே ...
மரணத்திலிருந்து  மீளுதல்
அவ்வளவு இலகுவானதல்ல

புரிதலற்ற உன்னிடம்
அந்த எதிர்பார்ப்புக் கூட
விசங்களையே
உய்ப்பிக்கின்றன

தனிமையும்  வெறுமையும்
 கலந்த  இந்த இருட்டுலகில்
 நீயற்ற வாழ்வில்-- இருந்து
 நான் மீளும்  காலம் வெகு
 தொலைவில் இல்லை .

யாழ் .தர்மினி பத்மநாதன்
20.05.2015
meendum thodankum  midukku

Saturday, October 17, 2015

காணாமல் போனவன் ..[2 ]....
தேடித் தேடி அலையும் மனசாய்
தேட இடமின்றி ...மனம்
முழுக்க கலங்கிப் போய்த் 
தவிக்கின்றேன் .......
உடலில் எத்தனை நோய்கள் ?
உள்ளத்தில் எத்தனை வலிகள் ?
சமூகத்தில் எத்ததனை கேள்விகள் ?..
எல்லாவற்றையும் நிரப்ப ---தற்கொலை
கூட சுகமானது எண்டு நினைக்கின்றேன் ...
ஆயினும் நீ வருவாய் என்ற ஆத்மார்த்த தேடலுடன் .....
யாழ். தர்மினி பத்மநாதன் [18.10.2015] .
காணாமல் போனவன் ..[1]....

நிமிடங்கள்  மணித்தியாலயங்கள் ஆகி 
அவை  நாட்களாகி  வருடங்களாகின ...ஆயினும் 
உன்னை  நினைக்கின்ற பொழுதெல்லாம் 
கருகித் துடிக்கின்றது  --என் மனம் 
நீ வருவாய் என்ற நப்பாசையில் 
மீண்டும்  பூக்கக் காத்திருக்கின்றேன் .
..
யாழ்.தர்மினி பத்மநாதன்  18.10.2015
ஒரு அரச நிறுவனமோ , தனியார் நிறுவனமோ  அங்கு  தொழில் புரியும் தொழிலாளர்களின்  அடிப்படை  [ உரிமைகளில் ]  வசதிகளை சீராக செய்து கொடுக்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை . 

அதிலும் குறிப்பாக பெண் ஊழியர்களின்  அடிப்படை வசதிகள் மேலும் கவனிக்கப் படல் வேண்டும் 

 என்று .............இத்தால்  நாங்கள் புத்தகங்களில்  மட்டும்  சப்பியுள்ளோம்  என்பதை  அறியத்தருகின்றோம் . ..யாழ் .தர்மினி
இலங்கை தீவின் தேர்தலும், ஈழத் தமிழரின் எதிர்காலமும்.
------------------------------------------------------------------------------------------------
           வருகிற ஆகஸ்ட் 17 இல் இலங்கைத் தீவில் "நாடாளுமன்ற பொதுத் தேர்தல்" நடக்க இருக்கிறது. இது "அவசர,அவசரமாக" கொண்டுவரப்படும் தேர்தலாக இருந்தாலும், இதுதான் சில,பல, காரியங்களை தீர்ப்பதற்கு, இலங்கை மக்களால் எதிர்கொள்ளப்படும் தேர்தல். ஆகவே இந்த தேர்தலைப் பொறுத்தவரை, தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, சிங்கள மக்கள் மத்தியிலும் கூட, "யாரைத் தேர்வு" செய்ய என்ற குழப்பம் உருவாகியுள்ளது. தென்னிலங்கையில் வசிக்கும் "சிங்களப் பெரும்பான்மை" மக்கள்தான் இந்த தேர்தலில் "தீர்மானிக்கும்" பாத்திரத்தை வகுப்பார்கள். அதாவது இத்தகு முன்பு நடந்த "அதிபர் தேர்தலில்" எப்படி தமிழ் மக்களது வாக்குகள் அதிபரின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்ற நிலை இருந்ததோ, அதேபோல இந்த நாடாளுமன்ற தேர்தலில்,தென்னிலங்கையின் சிங்கள வாக்காளர்கள்தான் "தீர்மானகரமான" பங்களிப்பை செய்வார்கள் என்பதுதான் கணிப்பு. அதையே வேறு வார்த்தைகளில் கூறப்போனால், "சிங்களர்களுக்கு, அதிபர் தேர்தலில், தமிழர்கள் வாக்குகள் வேண்டும்: ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்கள் வாக்குகள் வேண்டாம்".
                              
                    இத்தகைய ஒரு சூழல்தான் இந்த தேர்தல் அறிவிக்கப்படும் நேரத்தில் கூட இருந்தது. அனால் இப்போது அப்படி இல்லை என்பதுபோல தோன்றுகிறது.ஏன் என்றால், "சிங்கள வாக்குகளை அள்ள. மஹிந்த ராஜபக்சே களம் இறங்கிவிட்டார்". இது ரணில் விக்ரமசின்கேவிற்கும், அவரது "ஐக்கிய தேசிய கட்சி"கும் அதனுடன் கூட்டு சேர்ந்திருக்கும் "தமிழ், முஸ்லிம், மலையக" கட்சிகளுக்கும், ஒரு "சவாலாக" அமைந்துவிட்டது. அதன் விளைவு, "ஈழத் தமிழர்களது" வாக்குகள் இந்த  தேர்தலிலும், "முக்கியமானதாக" உருவாகி  உள்ளது. ஆனால் அது வேறு ஒரு வகையில்தான் செயல்படும். அதாவது தமிழர்களின் பகுதிகளில் இருந்து" தமிழ் பிரதிநிதிகளும்", முஸ்லிம்களின் வாழும் பகுதியிலிருந்து குறிப்பாக "கிழக்கு மாகாணத்திலிருந்து, தமிழ் பேசும் முஸ்லிம் பிரதிநிதிகளும்", மலையகத்திலிருந்து,"இந்திய வம்சாவளி பிரதிநிதிகளும்", சிங்களர் பகுதிகளிலிருந்து, "சிங்கள பிரதிநிதிகளும்" நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அவர்களில் ஒவ்வொன்றிலும் "யார்,யார்" என்பதே இப்போது கேள்வியாகி விட்டது.

         சிங்களப்பகுதிகளிலிருந்து அதிபர் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற "மஹிந்த ராஜபக்சே" வகையாளர்கள்  தேர்வு  செய்யப்பட மட்டுமே அதிக வாய்ப்பு உள்ளது. கிழக்கு மாகாணத்திலிருந்து, "இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்" பிரதிநிதிகள் அதிகமாக்  தேர்வு  செய்யப்படுவார்கள். அவர்களுக்கு அவர்களது சமூகம் மத்தியில் பெரும் எதிர்ப்பு கொடுக்க எந்த ஒரு பெரிய அமைப்பும் தெரியவில்லை. அவர்கள், ரணில் தலைமையிலான் "ஐக்கிய  தேசிய  கட்சி"யுடன் கூட்டணி கொண்டுள்ளனர். அதனால் தென்னிலங்கையில் குறைந்தாலும், ரணிலுக்கு கிழக்கு மகான முஸ்லிம் கட்சி மூலம் பிரதிநிதிகள் கிடைப்பார்கள். மலையக வாக்காளர்களிலும், ரணில் அணிக்கு மாறியுள்ள, ராஜபக்சே எதிர்ப்பு அரசியலுக்கு"தாவிவிட்ட" அல்லது ஏற்கனவே இருக்கின்ற  "மனோ கணேசன்" போன்றவர்கள் இருப்பதால் அதுவும் ரணில் கட்சியின் கூட்டணிக்கு ஆதரவான பிரதிநிதிகளை கொடுக்க வாய்ப்பு உள்ளது. 

             ஆனால் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் வாக்காளர்கள் நிலைமைதான் இன்னமும் தீர்மானிக்க முடியாத நிலையில் உள்ளது. அதாவது இதுவரை, "ஒற்றுமையை காட்டவும், தமிழர் நலன்களை பிரதிபலிக்கவும்,"அசைக்க முடியாத நிலையில்" ஒவ்வொரு  தேர்தல்களிலும்  இருந்த "தமிழ் தேசிய கூட்டமைப்பு" இந்த முறை பழைய சாதகமான சூழலில் இல்லை. அதற்க்கு எதிராக, "கஜேந்திரகுமார்" தலைமையில் உள்ள "அகில இலங்கை  தமிழ்க் காங்கிரஸ் ", வித்யாதரன் தலைமையில் உள்ள :"முன்னாள் போராளிகள்" ஆகியோர் ஒருபுறமும், வடக்கு மாகான முதல்வர் விக்னேஸ்வரன் "தான் கூட்டணிக்கு தேர்தல் வேலை செய்யப்போவதில்லை" என்று கூறியுள்ள செய்தியும்,வாக்காளர்களை "மறு பரிசீலனைக்கு" சிந்திக்க வைக்கிறது.புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்தும், வித்தியாசமான "கருத்துகள்: வருகின்றன. "நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின், தலைமை அமைச்சர் விஸ்வநாதன்  உருதிரகுமார்" தனது அறிக்கையில், "சொல்லை மட்டுமல்ல, செயலையும் கவனித்து வாக்களியுங்கள்" என்று கூறியிருப்பதும், சிறிய அளவிலாவது தாக்கத்தை ஏற்படுத்தும்.

                        விக்னேஸ்வரன் ஒருமுறை, சமீபத்தில், "நேரடியாக  தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக" கூட்டணி பாடுபடும் என்றும்,"ரகசியமாக பேச்சுவார்த்தை" நடத்த வேண்டியது இல்லை என்றும் கூறியது யாருடைய செயலைப் பார்த்து என்ற கேள்வியும் கூட சிலாகிக்கப்படும். சுரேஷ் பிரேமச்சந்திரன், "இந்தியாவும், அமெரிக்காவும், தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக முயலவேண்டும்" என்று கூறியிருப்பதும் கூட,  தேர்ததலில் "கூட்டணியை" ஆதரித்து பணியாற்ற வெளிநாட்டு சக்திகளையும் கூட "கணக்கில்" எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஏன் என்றால் "சீனாவின் ஆதரவை" பெற்றுதான் மகிந்தா களம் காண்கிறார் எனபதே பேச்சு. ஆகவே தமழர்கள் தங்களுக்காக வாதாடும் பிரதிநிதிகளை "கட்சிகளை தாண்டியும் கூட" தேர்வு செய்யக் கூடிய தேவை எழுந்துள்ளது. எப்படியோ "வலுவான தமிழர்களின் பிரதிநிதிகள்" தேர்வு  எனபதை தமிழ் வாக்காளர்கள் உணரவே செய்கின்றனர்.

tss .மணி 
பத்திரிகையாளர் 
தமிழ்நாடு. 
ஜெய்க்கா  நிறுவனத்தின் அனுசரணையில்  யப்பான்  வேல்சிப்  ஒசெல்ரா குழுவினரின்  பல்லிய இசைக் கருவிகளின்  ஆற்றுகை  அண்மையில்  யாழ்பல்கலைக் கழக  மருத்துவபீட  அரங்கில் நடை பெற்றது .  வடக்கையும் தெற்கையும்  இணைக்கும்  சமாதானப் பாலமாக  நடாத்தப் பட்ட இவ் இசை  ஆற்றுகையில்  தமிழ் சிங்கள மாணவர்களுடன்  யப்பானிய  கலைஞர்களும்  பங்கு கொண்டனர் . 

இவ் இசைப்  பயிற்சிக்கு முல்லைத்தீவு  மற்றும் குருநாகல் மாவட்டங்களை  சேர்ந்த  குறைந்த வருமானங்களைக் கொண்ட  மாணவர்கள் தெரிவு செய்யப் பட்டு இருந்தமை  குறிப்பிடத்தக்கது .
[ படங்களும் தகவலும் ... தர்மினி பத்மநாதன் ]
நல்லூர்  உற்சவ  காலத்தை முன்னிட்டு துர்க்காதேவி மணிமண்டபத்தில்  நடைபெற்று வரும் தெய்வீக இசை அரங்கின் இறுதி நாள் நிகழ்வு  நேற்று [13.9.2015] நடைபெற்றது. 

இசை அரங்கில் புலம்பெயர் தேசத்து கலைஞரும் அண்ணாமலைப் பல்கலைக் கழக இசை ஆய்வாளருமான  ''  ஈழத்துச் சீர்காழி '' நயினை சிவமைந்தன்  மற்றும் இளங்கலைஞர் மன்ற மாணவர்கள் ஆகியோர் இசைக்கச்சேரி நடாத்துவதைப் படங்களில் காணலாம். 

யாழில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட குறுந்திரைப்படங்களில் பார்வையாளர்களால் சிறந்த குறுந்திரைப்படமாக தெரிவு செய்யப்பட்ட "பை" குறுந்திரைப்படத்திற்கான விருதினை ராச் சிவராஜ் பெற்றுள்ளார்  .
ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடாத்திய  சர்வதேச சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற  சிறுகதை

பட்டாம் பூச்சி [ சிறுகதை ] 



அப்பா  ....''அம்மா எங்கப்பா  '' ?.  ''அம்மா எங்கப்பா ''?.  .....தலையை இரு கைகளாலும் சொறிந்த  படி மழைத் தண்ணீயில் நனைந்தவளாக   இடை விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள்  இசையாள் .
''உனக்கு  எத்தினை தரம் சொல்றது   அம்மா கடவுளிட்ட போயிட்டா எண்டு ''....தண்ணீக்க நிக்காமல் உள்ள போ ...போ ... அவளுக்கு  என்ன  ?  நின்மதியாய் போய்ச் சேர்ந்திட்டாள் .  நான் தனியக் கிடந்தது சீரழியிரன் . 
  ''மழையில நனையாமல் முதலில உள்ள போ .''..கோபம்  தாங்க முடியாமல் அவளை விரட்டி உள்ளே அனுப்பினான் , கொட்டும் மழையின் வெள்ளம் உள்ள வரவிடாமல்   ஆணை
போட்டுக் கொண்டு இருந்த  ராகவன் தன் காலைப்  பார்ப்பதும் , சரி செய்வதும் என்று கீழ்
மூச்சு  , மேல்  மூச்சு வாங்க  நனைந்து நனைந்து வெள்ளத்துக்கு அணை போட்டுக்கொண்டு . இருந்தான்.ஓலையில் இருந்து வடியும் தண்ணி ஒழுக்குகளில்  விளையாடிக்கொண்டு இருந்தாள் இசை .
'' தொப்புத்   தொப்பு  ''என்று விழும் தண்ணிக்கு பொத்தான் வைத்தாள்  மீனாட்சி .
இசை   நனையாதை  சளி பிடிச்சு காச்சலாக்கி போடும்  . பிறகு நான்ஆஸ்பத்திரிக்கு கொண்டு திரிய ஏலாது சொல்லிட்டன். உன்னை வைச்சு என்ன செய்யப் போறேனோ ஆண்டவனுக்கு தான் தெரியும் .புறு புறுத் கொட்டினான் ராகவன் . மழையில் நனைந்து  தோய்ந்தவனின் தலையை துடைத்து கோப்பி   கொடுத்தாள் மீனாட்சி.
''அப்பம்மா  . ... எனக்கு''?
''ம்ம்.....    மழையில  விளையாடி களைச்சுப் போய் இருக்கிறா குடுங்கோ ..... அவாவுக்கு குடுங்கோ..''
விளையாடுற நேரத்துக்கு  இரண்டு வாய்ப்பாடுபாடமாக்கிஇருக்கலாம்அடுத்தவருஷம் பள்ளிக் கூடம் போகேக்க தெரியும் .
அவளை  சும்மா விடு . படிக்கிற பிள்ளை படிக்கும் . இன்னும் பள்ளிக்கூடமே சேர்க்க  ஒருவருஷம் இருக்கு இப்ப  என்ன அசவசரம் ? 
நாங்கள் தான் ஒண்டும் ஒழுங்காப் படிக்கேல  ..அதுக்கு தான் சொல்றன் .......
''சரி சரி விடு...''
ஆஅ..... அ ...ம் ..மா ....என்ற படி காலை    தூக்கினான் ராகவன் . 
அப்பம்மா  ......''அப்பாவுக்கு நீங்களா அம்மா?''...
 '' அப்ப ..... எண்ட  அம்மா எங்க   '' ?........
.''.நானும் அம்மாட்ட கடவுளுட்ட போகட்டா? ''
 ''இசை .............இங்க வா .. '' அதெல்லாம் அப்பம்மாக்கு தெரியாது பேசாமல் போயிரு ..
அம்மா  கொஞ்சம் இளம் சுடுதண்ணி  தாங்கோ .....கால் வலிக்கிது
தெரிஞ்சும் தெரிஞ்சும் ....நீ போய் தண்ணியில நிண்டால் சரியே ?
பின்ன என்னம்மா ?. நாங்கள் குளிருக்க  நனைஞ்சு கிடந்தாலும் பரவாயில்லை பிள்ளையை என்ன செய்றது .?.
இதுக்கு தான்  ஆயிரம் தடவை  கெஞ்சிட்டன் அவள் பவித்திராவை கட்டு எண்டு . அவளைக்கட்டினால் மாமாவுக்கும் நின்மதி . உன்னை விட அவள் வயசும் குறைவு தானே . இந்த நேரத்தில தானே அவளுக்கும் சரி உனக்கும் சரி  மனசுக்கு ஆறுதலும்  நின்மதியும் கிடைக்கும் மாமா அவுஸ்திரேலியா அனுப்புறதை விட அவள் இங்கஇருந்திட்டால் அவரிண்ட கடைசி காலமும் சந்தோசமாய் ஆத்மாசாந்தி அடையும். ம்ம்ம்ம்ம்ம்ம்  என்ன செய்வம் எல்லாம் விதி தான் .

நாங்கள் என்ன பாவம் செய்தம் ?. நானும்  அப்பாவை இழந்தன் , நீ உன்ர  பெண்சாதியை  இழந்தாய் , பவி புருசனையும் தாயையும்  இழந்தாள்  .... இசைக்கு அம்மா இல்லை.....என்ட  ஐயோ ..... என்ட  ஐயோ .... எங்களை  ஏன் சித்திரவதை செய்றாய் ?. நாங்கள்  யாருக்கு என்ன பாவம் செய்தம் .....தலையில் அடித்து  கத்தினாள்  மீனாட்சி .அடிக்கடி  அவள் இப்படி புலம்பிப் புலம்பியே உரு மாறிக்கொண்டு இருந்தாள் .அவள் மனதின் ஆசைகள் அண்ணன்  சுந்தரமூர்த்திக்கு தெரியும் 

.மழை தாழ்வாரத்தில்  குடையை சூழட்டியவளாய் '' மாமி ...,மாமி ....'' மழை  ஓயவிட்டு உங்களை அப்பா ஒருக்கா வந்திட்டுப் போகட்டாம். பட்டம் பூச்சியாய் சிறகடித்தாள்  பவித்திரா . 
''உள்ள வா பிள்ளை . இந்த  மழையில என்ன ?அவசரமாம் . '' அண்ணைக்கு  வயசு போயும் இன்னும்அவதிக் குணம்  போக இல்லை .நான் கத்தினது  ஏதும் கேட்டுட்டுதோ ....பேசப் போறார் போல ...
''சாப்பிட்டியா  பிள்ளை ....உள்ள வா .....'' அழுத கண்ணீரை  தோள்மூட்டு கையினால் தேய்த்து மூக்கை உறிஞ்சினால் மீனாட்சி .
 ''இசை ...படுத்திட்டாளா ..மாமி '' ?,  அவளை தொட்டு பார்த்தாள்  பவி .
இவள நேரம் மழையில விளையாடிட்டு தகப்பனி ட்ட பேச்சு வாங்கிட்டு  கிடக்கிறா .. அது வர வர கேக்கிற கேள்வியள் என்ன பிள்ளை ?. இப்ப உள்ள பிள்ளைகளின்ட அறிவோ?. சா .....அடம்பிடிப்பும்  கூடிப்போட்டுது......இசை பற்றி புராணம் வேறு  புளுகினாள்  மீனாட்சி . மீனாட்சியின் கனவெல்லாம் எப்படியும் பவியை  தன்னுடன் இழுத்துப் போடா வேண்டும் என்பது தான் .

 '' செல்லக் குட்டி...'' மாம்பழம் ... அவளை ஆசையுடன் கிள்ளிக் கொஞ்சினால் பவி . இரண்டு மணி ஆச்சு .....சாப்பிடாமலா ?
கோப்பி குடிச்சவள் , மழையில  விறகும் நனைஞ்சு எரியிது  இல்லை பிள்ளைஅடுப்பிலகஞ்சிஇருக்கு . எழும்ப சரி வரும் ....அடுப்படியில் நின்று என்ன இருக்கு என்று துழாவினால் பவி .பிள்ளைக்கான சாப்பாடு  எதுவும் இல்லை . கொஞ்ச அரிசி , வெங்காயம் , பாதி தேங்காய் என்று ஒரு சில மட்டுமே  குசினியின் அடையாளமாக இருந்தது . . 
அந்த நேரம் நெல்லு மூட்டை வைக்கவே இடம் இருக்காது என்ன மாமி ?. இப்ப குசினியில பூனை தான் ,...ம்ம்
தென்றல் இருந்திருந்தால் இப்ப எனக்கும் இவள் மாதிரி ஒருத்தி இருந்திருப்பாள் என்ன  .... மனம் எண்ணிக் கொள்ள   இசையை  ரசித்தால் பவி ...
.''மாமி.......'' ''மாமி  ...'' எனக்கு வெளிநாடு போக விருப்பம் இல்லை மாமி .  எங்காவது நல்ல வேலை
கிடைச்சால் அது காணும் எனக்கு . அப்பா தான் பயந்து பயந்து சாகிறார் . நீங்கள்தான் மாமி அவருக்கு விளக்கமாய் சொல்ல  வேணும் . வெளிநாடிலும் யார் தான் நின்மதியாய்  சந்தோசமாய் இருக்கினம் . எனக்கு அங்க என்ன தெரியும் மாமி ? அதுவும் அறிமுகம் இல்லாத எயன்சியோட ......ம்  ஆ .......நான் அடுத்த கிழமை வேலை தேடி கொழும்புக்கு போகப் போறான் ..

எதுக்கு கொழும்பில?.  அங்க என்ன எதுவோ தெரியாமா போயிட்டு .....என்ன வில்லங்கமோ ?

யாழ்ப்பாணம்  வவுனியா கிளிநொச்சி எண்டால்   இப்ப வேலை எடுக்கிறது கஷ்டம் .. அதுவும் எங்களப் போல இருக்கிறவை பாடு அவளவும் தான் .நானும்வாழத்தானே வேணும் . அப்பாடபென்சன் என்னத்தை காணும் .அண்ணா  நாங்கள் பார்ப்பம் எண்டு மாதம் மாதம் கொஞ்ச காசு அனுப்புவார் .
அவருமந்த குளிருக்க என்ன  கஷ்டப் படுராரோ யாருக்கு தெரியும் ?.எனக்கு தானே ஆண்டவனே எண்டு கால் கை இருக்கே. படிச்ச படிப்பும் இருக்கு.அப்பாவை கடைசி காலம் யாரை நம்பி நான்  விட்டு போறது ?. .. நான்   பிறகு யாருக்காக வாழ வேணும் மாமி ?. .....இப்பவே அநாதை மடத்தில சொல்லிவச்சிருக்கிறன் . எண்ட காலத்தில  அவர்களுக்கு  உதவியாய்  போயிடலாம்.

'''விசராடி உனக்கு?. படிச்ச பிள்ளையா நீ.... விசர்க் கதை கதையாதை ..அநாதை மடம் போகவா  உன்னை .........''' அவளைக்  கட்டி அனைத்து அழுதாள்  மீனாட்சி .
  வேற என்ன மாமி செய்யா?.
ஆசைப்பட்டு  கட்டினன் . எல்லாமே கனவு மாதிரி போயிட்டு .  சரி போகட்டும் இவளவு தான் நான் குடுத்து வைச்சது . இப்ப முப்பத்தி ஐந்து  வயது . பத்து வருஷம் நான் உழைச்சிட்டுஅதையும்கொண்டு  போயிட்டா நானும் கௌரவமாய் ....சாகலாம் மாமி
......... ம்ம்ம்ம்ம்  குளமான  கண்களை துடைக்கும் வேளையில்
''அம்மா?......எங்க?. ''ராகவன் குரல் கொடுத்தான்

வாறன் வாறன் .... தண்ணி அடுப்பில தான் இருக்கு . வாயால தான் கதைக்கிறம் ....

ம்ம்ம் ... கதை கண்டால் சரி ...

கோபப் படாதிங்க ரகு அண்ணா ........உங்களுக்கு இன்னும் தான் சுடுதண்ணிக் குணம்
விட்டுப் போகலையா?.

''ப....வி..................''துரத்தே அவள்  அப்பா கூப்பிடுவது கேட்டது .
வரட்டாம் போ .... இப்ப நீ போய்  பேச்சு வாங்கு கிண்டல் அடித்தான் ராகவன் .
குறும்புத் தனத்துடன் மாமியாரிடம்  விடை  பெற்று ஓடினால் பவி .
இளம் சூட்டு நீரினால் தனது கால்களுக்கு டெட்டொல்  போட்டு கால்களைக் கழுவித்
துடைக்க மழையும் ஓய்ந்தது .  கஞ்சியை குடித்து விட்டு  திண்ணையில் பாயைப்
போட்டு படுத்து விட்டான் ராகவன் .
சுந்தரமூர்த்தியிடம் போயிட்டு வந்த மீனாட்சிக்கு மனம் நிறைய குளிர்ந்தது   ஆனால்  உறுதிப் படுத்துவதில்  தடுமாற்றங்கள் அதிகம் . ....
நாட்கள் மாதங்கள் ஆக  ராகவன் வீட்டிற்கு ஆடிக்கும்  அமாவாசைக்கும் தலை நீட்டிய  பவித்திரா அடிக்கடி அவன்  வீடு வர ஆரம்பித்தாள் . 

அப்பா ......''அம்மா எங்கப்பா ?..... அம்மா  போட்டோ காணல .....
''பிள்ளைண்ட  அம்மா  வரப் போறா .....அப்புச் சாமி  பிள்ளையிட்ட அம்மா வை போக சொல்லி சொல்லிட்டாராம் ..'' . செல்லம் கொஞ்சினால்  மீனாட்சி 
அப்பா ... அம்மா உங்களைப் போல பேசுவாவா ?.   அடிப்பாவா? எனக்கு  நிறைய சொக்கிலேட் ... பிக்கா  எல்லாம் கொண்டு வருவாவா? நிறைய அச்சாச் சட்டை , சப்பாத்து ...மாலை எல்லாம் வாங்கிக் கொண்டு வருவாவா? எனக்கு குட்டி சயிக்கில் ...நிறைய போட்டு ....பென்சில் , ஐ போன் , எல்லாம் வாங்கி தருவா தானே ........

அப்புச் சாமி எல்லாம் அம்மாட்ட குடுத்து விடுவாரா அப்பா ......?
அம்மாட்ட சொல்லுவன்  ஒரே ஒரே நீங்கள் அடிக்கிறனிங்கள் ,  பேசிரணிங்கள் எண்டு  சொல்லுவான். உங்களுக்கு அடி வாங்கி தருவன் .
அவளை  இறுக  கட்டி அணைத்தபடி  படுக்கையில் சரிந்தான் ராகவன் . இசையாளுக்கு  அடிப்பது தொடக்கம் , பேசுவது , அவள் மீது கோபப் படுவது வரையும் நினைத்து நினைத்து அழுதான் ராகவன் , 

ராகவன் மாவீரன்  குடும்பம்  என்பதால் அவன் மீது நேசம்  அதிகம்  காவியாவுக்கு . காவியா மாணவர் படையணியில்  தன்னை ஆரம்பத்தில் இணைத்து பின்பு  தாயக சேவையில் தன்னை  அர்ப்பணித்து இருந்தாள் . பெண்கள்  அபிவிருத்தி குழுவின் தலைவியாகவும் அவள் இருந்தமையால்  வேலையின் நிமித்தம் ராகவனை சந்திக்க முடிந்தது . ராகவனும் பொறுப்பான வேலைகளில் இருந்தமையும் அவன் மீது காவியாவுக்கு ஈர்ப்பு அதிகமானது . இருவரின் பெற்றோர் சம்மதமின்றி  கிடைத்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்குரிய உறவுகளின் முன்னிலையில்  குடும்பமாகிக் கொண்டனர் . காவியா தன்னுடைய பணிக்காக சேவையில் நிற்கவும் . ராகவன் தன்னுடைய பணிக்காக சேவையில் நிற்கவுமே அவர்களின் காலங்கள்  அதிகமானது . ஆயிரம் தான் இருந்தாலும் ஆணாதிக்க மனநிலையில் இருந்து விடுப்பு பெறுவது என்னவோ  ராகவனால் இயலாத காரியமாகிப் போக . தன்னிலையில் நின்றும் மாறா தவளாக்கிப்  போனாள் காவியா. ஏட்டிக்குப் போட்டியாக இருவரும் நடந்து கொள்வதும் , விட்டுக் கொடுப்பின்மையும் இருவர் வாழ்க்கையையும் பாதிக்கவே செய்தது . அவள் மீது தீராத சந்தேகங்கள் ராகவனுக்கு  நீடித்திருந்தது . 

'' நான் உங்களைப்  புரிந்து கொள்ளாமல் தெரியாமல் ஆசைப் பட்டு விட்டேன் ரகு . அதுக்காக  இரண்டாம் கலியாணம்  நீங்கள் செய்தாலும் நான் செய்யப் போவதுமில்லை .என் படிப்பு எனக்கு சோறு போடும் ,நான் யாரிடமும் பிச்சை கேட்டுப் போக மாட்டன் .எனக்கு இனி வாழ வேண்டும்  என்ற விருப்போ ஆசையோ இல்லை ரகு . ஆனால் என் சாவு அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும் .என்னை உங்களுக்கு பிடிக்கவில்லை என்று ஆரம்பத்திலே நீங்கள் சொல்லி இருந்தால் நான் உங்கள் சித்திரவதையை அனுபவிக்காமல் சந்தோசமாய் வாழ்ந்திருப்பேன் . என் தலை விதி அவளவு தான் . உங்கள் பணங்களை தின்றவள் என்ற வகையில் என்  உடல் கூசுகின்றது ரகு . என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் .  இன்னும் இரண்டு மாதத்தில் பிறக்கப் போகும் குழந்தையை பெற்று தந்து விட்டு நான்  போகின்றேன் . அதன் பின் எல்லா வழியிலும் நீங்கள் சந்தோசமாக இருங்கள் ..''..........என்று ஆத்திரத்தின் முடிவாக மட்டுமன்றி காலத்தின் தேவையாகவும்  களம் சென்றாள் காவியா. 

.''..கா ....வி ...யா ... என்னை மன்னிச்சுக் கொள்ளு ...காவி ...''

பெண் பாவம் என்னை சும்மா விடாது ...உண்மை தாண்டி ..காவி ...ஆஆஆஆஆ ...... பிள்ளையின்ட முகத்தை கூட ஒரு மாதம் தானே பார்த்தாய் ....அவள் அடிக்கடி   '' அம்மா எங்க ....அம்மா எங்க ''  என்று கேட்டு கேட்டு என்னை சாகடிக்கிறாள் ,,,காவியா ...

இங்க பார்...ஆ .....இங்க ....இரண்டு காலுமே ,முள்ளி வாய்க்காலில போட்டுது காவி ...போட்டுது ....ஒரு நேர சாப்பாட்டுக்கே வழி  இல்லாம  இப்ப  கஷ்டப் படுறன் .....பார்......என்ற காலைப் பார் ...கையைப் பார் எத்தினை காயம் பார் .....பார்....பார்...பார் ......ஆஆஆஆஆஅ    அழுதான் ராகவன் . 

தம்பி ...ரகு ...ரகு ...என்னய்யா ?.......
''   அம்மா ...அம்மா.....''   எண்ட  காவியா .......

 பிள்ளையை சரிச்சு படுக்க விடு ...எதுக்கு நெஞ்சிலையே விட்டனி...உனக்கு .ஏலாது எண்டு தெரியும் தானே ...கொஞ்ச  தண்ணி குடி ....இந்தா ... ..கனவே கண்டனி ?...அமைதியாய் படு .தம்பி. 

அவன் கனவு கண்டு போட்டான் போல . இனி பவியைப் பார்க்கிற நேரம் முழுக்கு கவியிண்ட நினைவும் வரும் தானே .வாழ வேண்டிய வயசில ......ம்ம்ம்  ஆண்டவன் தான் மன தைரியத்தையும் சந்தோசத்தையும் குடுக்க வேணும் ... தனக்குள் வேண்டினாள்  மீனாட்சி . 

''  ரகு ...என்னை விட்டிட்டு சந்தோசமாய் இருக்கிறிங்கள் தானே  என்ன ?. நான் அப்பா இல்லாதவள் , எனக்கு எண்ட அப்பா  கிடைச்ச   சந்தோசத்தில  உங்களை எப்பிடி எப்பிடி  எல்லாம் கனவு கண்டன்  தெரியுமா?  உங்கட மனசில  நான்  இருக்கிறேனா ரகு ....ரகு ....அப்பா ..அப்பா ....சொல்லுங்களன். '' ஹாஆ  ஹாஆ  ஹா  ....குலுங்கிக் குலுங்கி சிரித்தவளாய் .. குமுறலுடன் கேட்டாள் காவியா. 

'' காவியா ....காவியா... நீ .... எங்க ...இருக்கிறாய் ... இங்க வா ....ஓடாதை ..நில்லு .....நில்லு ... ''  அவசரமாக தனது பொய்க்கால் களை  பூட்டியும்  , பூட்டாமலும்   ஓட வெளிக்கிட  மீனாட்சியும் திடுக்கிட்டு எழும்பினாள் . 

'' அம்மா காவியா இருக்கிறாள் அம்மா .... அவள்   அந்தா... இப்ப வந்திட்டு ... மாமா வீட்டு கதவால ஓடுறாள் அம்மா ....'' ...அவள் என்னை விட்டிட்டுப் போராள் ... அம்மா ..............ஐயோ.... ஓஒஒ......'' அவள் தான் ... அவள் தா....ன் ...ம் ..

நீ கனக்கா ஜோசிக்கிறாய்   .... அவள் உன்னை ஆசீர்வதிச்சிட்டு போராள்  போல . முகத்தை கழுவிட்டு படு ......ரகுவின்  கடந்த கால எண்ணங்களை துடைக்க பவித்திராவால்  எப்படி முடியும் ?. பவித்திராவின் இழந்த  கனவுகளைக்க கலைக்க ரவியால் எப்படி முடியும் . ? 
இருந்தும் இருவருமே புரிந்து கொள்ளலின் அடிப்படையில் ..............

அப்பா ......  '' அம்மா ...எப்ப வருவா........ப்பா ........''   தேடலில் காத்திருக்கும் இசையாள் வீட்டில் பூபாள  இராகத்துடன் பட்டாம் பூச்சி  சிறகடிக்கத் தொடங்கியது .

முற்றும் 

யாழ் .தர்மினி பத்மநாதன் 


அறிமுகப் பெண்  இயக்குனர்  சோபிகாவின்  இயக்கத்தில் , உதயா  நிறுவனத்தின்  தயாரிப்பில் , கிருபா லேனர்சின்  அனுசரணையில்  '' மாசறு  '' குறும்படம்  நேற்று  யாழ் .செல்லா திரையரங்கில்  வெளியீடு  செய்யப்பட்டது. 

மாசறு குறும்படம்  நேற்று  யாழ் .செல்லா திரையரங்கில்  வெளியீடு  செய்யப்பட்டது.   குறும்படத்தினை  வைத்தியர் வேலணையூர்   தாஸ்  வெளியிட்டு  வைப்பதனையும் , கலைஞர்கள்   அனுபவங்களைப்  பகிர்வதனையும் , நினைவுக் கேடயம்  வழங்குவதனையும் , கலந்து கொண்டோரையும்  படங்களில் காணலாம் . 

படங்கள்  ப.தர்மினி 

உள்  வீட்டுக்குள்ளேயே  என்ன ஒரு  ஈகோ அரசியல் நாடகம்.
 நாடகமும் அரங்கியலும்  பட்டப்படிப்பு படித்தும்  இப்படி ஒரு  நாடகத்தில் என்னால்  நடிக்க முடியவில்லை . அவ்வளவு பிரமாதம்  கதிரை கொடுக்கும் ஈகோ  அரசியல் நாடகம் ....யாழ் .தர்மினி 

Friday, December 26, 2014


தொடர்பியல்  ஊடகமான முகநூலில் யன்பாட்டு தமிழ்


1.அறிமுகம் 

ஆரம்ப கால மக்கள்  , ஆடல் பாடல் , அசைவு என்று   தங்கள்  வெளிப்பாட்டு  ஊடகமாக  ஓவியம் , சித்திரம்பாட்டு , நடனம் ., நாடகம் ..  போன்றவற்றை தொடர்பாடல் ஊடகங்களாகக் கண்டு பிடித்ததில்  ஆரம்பித்து இன்று வரை அவனின் ஒவ்வொரு அசைவுகளும்   இலத்திரனியல் ொழில்நுட்பம்  வரை தொடர்பாடலில் புரட்சி கண்டுள்ளது . 
 விஞ்ஞரனம் , தொழில் நுட்பப் புரட்சிகளால் தனித் தமிழ் , மற்றும் தமிழ் சமுகம் சிதைவடைந்து வருகின்றது என்ற கருத்தியல்  அனைத்து  மக்களிடமும்அனைத்து  மக்களிடமும்  அண்மைக் காலங்களில் யிர்ப்பெற்று  வருகின்றது
 இவ்வாறான அவலக் குரல்எழுப்புபவர்களாலே இத்தகைய சிதைவுகளை  ீர் செய்ய முடியாத மன அழுத்தங்கள் , நெருக்கடிகள் ஏற்படுவதும்குறையவில்லைஆயினும்  ஒவ்வொரு தொழில் நுட்பங்களும் பயன்படுதுபவனின் மனநிலை சார்ந்தே நன்மை , தீமைகளை  தீர்மானிக்க முடியும் .  அந்தவகையில் சமுதாய வலைத் ொடர்பு  ஊடகமான முகநூலில் தமிழ் மொழிப் பயன்பாடு  என்பதை  அடிப்படையாகக்  கொண்டு  இந்த ஆய்வுகட்டுரை  அமைகின்றது .


2. முகநூல் என்றால் என்ன

முகம் +நூல் என்பதை புலப் படுத்துகிறதுஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற கருத்து நிலை  இன்று அகத்தின் அழகு முக நூலில் தெரியும் என்கின்றவகையில் பரிமாணம் கொண்டுள்ளது .  முக நூல் , முகப் புத்தகம்என்றும் பொருள் கொள்ள முடியும்வ்வொரு மனித சமுதாயத்தினதும் , முகவரிகளை அவர்களுக்கும் தெரியாமலே உள்ளார்ந்து வைத்துள்ளது

இணையத்  தொழில் நுட்பத்தின்  புரட்சிகர வளர்ச்சியில் முக நூலின் பங்கு உன்னதமானது .  ஏனைய இணையத் தளங்களில் , இணையதழ்கள் ஆகியவற்றில்  பதிவுகள் , கருத்தை பதிவு செய்ய வெளிப்படுத்த  எத்தனையோ ஆயிரங்களும்  செலவாகும் .இன்று மிக இலகுவாக முகநூல்ஊடாக  பதிவு செய்ய முடிகின்றது .  வசதி வாய்ப்புள்ளவர்கள் முன்பு நூல்களை  வெளியீடு செய்தனர் .   இப்போ எல்லோர் கைகளிலும் ஒட்டிப் பிறந்தகுழந்தையாக கைபேசி ருப்பதனால் , கிராமங்களை கூட இணையங்கள் ஆக்கிரமித்து விட்டது . ஆயினும் அதில் முகநூல்  ஒருவரின் மனநிலையை மிக மிக ஒரு நோயார்ந்த போதை நிலைக்கும் கொண்டு செல்கின்றது .

blogs , மற்றும் ஏனைய  இணைய ஊடகங்கள்   ஒழுங்கு முறையில்  உள்ளது.ஆனால் முக நூல்  பல்வேறு  விடயங்களையும்  எந்த    தயக்கமுமின்றி ஆவணப்படுத்தும் ஒரு நூலகமாக உள்ளது . அச்சு ஊடகங்கள் , தொலைக்காட்சி ஊடகங்களில்  ஒரு பதிவை மேற்கொள்ளும் நாம் அவற்றை மீள் உருவாக்கம்செய்வது அவளவு இலகு அல்லஆனால் சமுதாய வலைத் தளங்களை பயன்படுத்தும் போது  எமது விருப்புக்களை , சிந்தனைகளை உடனுக்குடன் மாற்றம்செய்து கொள்ளவும் மொழிப் பயன்பாடு இலகுவாக்கப் பட்டுள்ளது .இங்கு தனி  மனித  அந்தரங்கங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ஆய்வாளர்கள்எச்சரிக்கை செய்கின்றனர் .  இது பற்றி  சென்னைப் பல்கலைக் கழக  தொடர்பியல் துறை  தலைவர்  பேரா . ரவீந்திரன் அவர்கள் குறிப்பிடும்  போது  '' முகநூல்போன்றவற்றில் அங்கத்தவர் ஆவதற்கு   பொது அந்தரங்கம் சார்ந்த பல விடயங்களை பதிவு செய்கிறோம்இந்த பதிவு செய்யப் பட்ட பதிவுகள் வ்வாறு பதிவுசெய்யப் படுகின்றன என்பது கேள்வியே . பன்னாட்டு நிறுவனங்கள் நம் அந்தரங்க விடயங்களை ஓர் வியாபாரத் தளத்துக்கு ொண்டு வரும் போது மற்றவர்கள் பார்வைக்கு வெளி வர வாய்ப்பு உண்டு . அப்பொழுது  பாதுக்காக எந்த முகாந்தரமும் இல்லை . '' என்கின்றார்ஏனெனில் அவர்களை தமிழ்மொழித் தொடர்பு  மிக ளிய முறையில்  பயன்பாட்டை  அடையாள படுத்தி உள்ளது என்றே கொள்ள முடிகின்றது . 


3. ,முக நூலின் தோற்றமும் .வளர்ச்சியும் 
பேஸ் புக்  2004 இல் தொடங்கிய ணைய வழி  சமூக வலையமைப்பு  நிறுவனம் ஆகும்ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில்  ஒரு மாணவர்  மார்க் சக்கர பார்க்ஹாவார்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்ததில் தொடங்கி செயல் முனைப்பு பெற்றுள்ளது .
2008 இல் முகநூளின் தமையகம்  அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில்  தொடங்கப் பட்டது . பின்பு 2011 இல் முகநூலின் தலைமையகம் ென்லோ பார்க் ,கலிபோர்னியாவுக்கு மாற்றப் பட்டது

சமூக வலைத் தளங்கள் ஊடாக  செய்தியளிப்பு  தீவிரமடைந்து உள்ளது . இன்று தொழில் நுட்பங்கள் பயனர்களையே செய்தியாளர்களாக்கி  உள்ளதுஇவர்கள்தமக்கான தளங்களை ாமே உருவாக்கிக் கொள்கின்றனர் . 
புரட்சிகர தொழில் நுட்பங்கள் நம சமூகத்தின் மத்தியில் பெரும் ஐயங்களை ஏற்படுத்தி  உள்ளது . லாசார சீர் குழைவு , தமிழ் மொழி சிதைவு  என்றெல்லாம்பலரும் பல கருத்தாடல்களை புரிவதும் நம் கண முன் நிகழ்ந்த வண்ணம் உள்ளது ஆயினும் தமிழ் மொழி சிதைக்கப் படும் என்றோ , தமிழ் அச்சு ஊடகம்ஒழிந்து  விடும் என்றோ நாம் ுரிதலற்று பேச முடியாது .  தொழில் நுட்பங்கள் தமிழ் மொழிக்கான ..... மென் பொருட்களை
 உருவாக்குவதன் ஊடாக அவை இன்னும் இன்னும் பரிமாற்றம் அடையும் வாய்ப்புக்களே அதிகம் . பல படைப்பாளிகளை , ஆளுமைகளை , தமிழ் டாகஉருவாக்கியும் உள்ளதுபுகைப்பட கலைஞன் , கட்பனையாளன்இயக்குனர்இசையாளன்எழுத்தாளன்,  என்று பல துறைகள் வளரவும் இங்கு தமிழ் உபயோகம் அதிகம் . . நாளைய பத்திரிக்கை  செய்திகளை கூட இன்றைய நிமிடச் செய்திகளாக பதிவு செய்வதில் பெரும் போட்டி நிலை கூட உள்ளதுஇந்தமொழிப் ிரயோகம் ஆங்கிலத்தில் இருக்குமாயின்  . இத்தகைய ஒரு புரட்சியை முகநூலினால்  செய்திருக்க முடியாது 

4. தமிழ் மொழி 
தமிழ் மொழி தமிழர்களினதும் , தமிழ் பேசும் பலரதும் தாய் மொழி கும் . இலங்கை யின்    வடக்கு கிழக்கு மாகாணம்கொழும்புதிருகோணமலை,  மலையகம்  போன்ற இடங்களிலும் , இந்தியா , 
மலேசியா சிங்கப்பூர்  ஆகிய நாடுகளில்  அதிகளவிலும் ,  ஐக்கிய அரபு  அமீரகம் , தென்னாபிரிக்கா , 
மொரிசீயஸ்  போன்ற நாடுகளில்  சிறிய  அளவிலும்  தமிழ் பேசப்பட்டு வருகின்றன [  விக்கி பிடியா ]
தமிழ் மொழி இனம்  சார்ந்தது . ஒரு இனத்தின் அடையாளம் ஆகும். தமிழ் நாட்டில் , தமிழீழத்தில்    தமிழோடு வாழ்ந்து , தமிழில் பேசி தமிழ்ப் பண்பாட்டைக் கடைப்பிடிப்பவர்கள்  தமிழர்கள் . தமிழை வேராகக் கொண்ட இரு நாடுகளிலும் தமிழ் சிதைவுறும் அவலத்தை இரு இரு நாட்டு அரசுகளும்  திட்டமிட்டு செய்கின்றன. [ vikki peediyaa] அதற்காக நாம் அப்படியே விட்டு விட முடியுமா? 



5, முகநூலில்  தமிழ் பயன்பாடு

தமிழ் மொழி இந்தியாவில் தமிழ் ாட்டிலும் , இலங்கை , சிங்கபூர் , மலேசியா  போன்ற நாடுகளில்  திகார மொழியாகவும் உள்ளது . இது தவிர பல உலகநாடுகளில் தமிழ் மொழி பேசுவோர்  வாழ்ந்து வருகின்றனர் 

கடந்த பத்து வருட காலத்தினுள் ுகநூலின் பாவனை காட்டுத் தீயானது . தகவல் தொழில் நுட்ப உலகில் ,  இன்றி அமையாத  சாதனமாகக் கூட  இந்தமுகநூல் பாவனை அமைந்திருப்பது  மிகை  அல்ல . பாடசாலை மாணவர் தொடக்கம் பெரிய பெரிய இலக்கிய கர்த்தா வரை முக நூலை பயன்டுத்துகின்றனர் . அவர்கள் பயன்படுத்துவது மட்டுமன்றி எழுத்தாளனாக , படைப்பாளனாக , அறிவியலாலனாக , விமர்சகனாக என்று பல்வேறுபாத்திரங்களையும்  பெற்றுக் ொள்ளக் கூடிய ஆளுமைகளை பெற்றுக் கொள்ளவும் இங்கு தமிழ் மொழி  யன்பாடு  மிக முக்கிய காரணியாக  அமைந்துள்ளது

நவீன  யுகத்தில் தமிழ் சமூகத்துக்கு கிடைத்த  மிகப் பெரும்   ேகமாக தகவல் பரிமாற்ற தொடர்பாடல்   ஊடகமாக முகநூல் புரட்சிகர மாற்றங்களைக்கண்டுள்ளது . பல்வேறு பட்ட இணையங்கள் போன்றவற்றுடன்  இணைந்து  அவர்கள் கருத்துக்கள்எண்ணங்கள்,  ஆதங்கங்கள்  , சந்தோசங்கள்துக்கம்,விவாதம்புரட்சி , குமுறல்கள் , கற்பனைகள் , கனவுகள்மட்டுமன்றிசெய்திகள்ஆய்வுகள்கருத்துக்கள்புகைப்படம்வீடியோ , விளம்பரம்மருத்துவம் ,கல்வி , ிருமணம் ,  போட்டிகள்கவிதைகட்டுரைகுறும்படம்இசைநடனம்நாடகம்புகைப்படம்,.தொழில் .....என்று யாவற்றையும் மனம் திறந்துவெளிப்படுத்தும்  ஊடகமாக முக நூல் உள்ளது

முகநூல் நட்புக்களை இணைத்துக் ொள்ளுதல்  என்பதனை அடிப்படையாகக் கொண்டு  இன்று இதன் பரிமாணம் விரிவாக்கம் பெற்றுள்ளது . இது இளம் சமூகத்தினிடையே  பெரும் சவாலாக் உள்ளது .தொழில் நுட் வளர்ச்சி இன்று யாரையும் யாரும் தொடும் அளவிற்கு சுருக்கி வைத்துள்ளது .ஒருவருன்பதிவுகளான   எண்ணங்கள்கதைகள்படங்கள்,  கல்விதொழில்  என்பன அவர் பற்றிய  எண்ணப் பாடுகளை , நோக்கம் குறிக்கோள்  , நட்புக் குழுக்கள் ,நட்பின்  தரம் , அரசியல்  போன்ற பின் புலன்களை கண்டறியவும் உதவுகின்றது.

பண்பாடு,கலாச்சாரம்கொண்தமிழ் மொழியினைத் தாயகமாகக் கொண்டு தமிழகமும் ஈழமும் விளங்குகின்றது .   ஈழத்தில் இனரீதியான  மொழிரீதியான  யுத்தத்தினால் தமிழ் மக்கள் பெருமளவில் புலம் பெயர்ந்து  அனாதரவாகி  ஏதிலிகளாக  உலகின்  நாளா  புறமும் வாழத் தொடங்கினார்கள் . ஈழப் போருக்கான  முக்கிய   காரணமே இந்த இன மொழிப் போர் தான்  இந்த இனப் போர் இல்லை என்றால் தமிழன் என்று ஒரு இனம் இருந்தது  என்றஅடையாளமே  இல்லாமல் போயிருக்கும்தமிழன்  என்பதற்காகவே  அடக்கப் பட்டான் , டுக்கப் பட்டான் , கொல்லப் பட்டான்கொலை செய்யப்பட்டான் ,கடத்தப் பட்டான் , கைது செய்யப் பட்டான் , காணாமல் போனான், , கரு கலைக்கப்பட்டாள் , வன்முறைக் குள்ளானாள் , இடம்பெயர்ந்தான்புலம் பெயர்ந்தான் ,   ஏமாற்றப்பட்டான் , அகதியானான் ...என்பது மட்டுமன்றி  ,சொத்துக்களும்  ,  சொந்தங்களும் , பந்தங்களும்  றிக்கப் பட்டன , வீடு அற்றவர்களாகவும், நாடு அற்றவர்களாகவும் நடுத் தெருவில் விடப்பட்டனர் . இன் நிலைமையிலும் ஈழத்தமிழன் தாய் மொழிக்காகவும்,  தமிழ் இனத்துக்காகவும் வாழ்  முழுக்க போராட வேண்டியவனாகவே உள்ளான் . இந்த உணர்வின் வலிகளே  இன்னும் இன்னும்  பாடுபொருள்களாக  முகநூலை அலங்கரிக்கின்றன . அமெரிக்கா ,   கனடா  ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா  , மற்றும்  ஈழம்  ுகநூல் பாவனையில் முன்னணி  வகிக்கக் காரணம் தமிழ்மொழிப் பயன்பாடே ஆகும். .

மிக அண்மைக் காலங்களில் பெரும் பாலும் 1995 களின் பின்பு  இலங்கையின்  இனவழிப்பு காரணமாக அகதிகளாக இடம் பெயர்ந்தும் ,  , தொழில்களின் நிமித்தம்,  கல்வி   மற்றும் திருமண பந்தங்கள்  ஊடாக  பல ஈழத் தமிழர்கள் ந்தியாகனடாஇலண்டன் , பிரான்ஸ் , அவுஸ்திரேலியாசிங்கப்பூர் , மலேசியா  , சுவீஸ்நோர்வே . என பல்வேறு நாடுகளில்   வாழ்ந்து வருகின்றனர் . இந்திய மக்கள் தொழில் , கல்வியின் நிமித்தம் வெளி நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் . த் தகைய நாடுகளில் பழைய தலைமுறைகள்  மற்றும் ஓரளவு இரண்டாம் தலைமுறைகள் தமிழ் மொழியை உயிர்ப்புடன் பேணி வந்தாலும் , புதிய லைமுறைகளுக்கு / , இளம் தலை முறைகளுக்கு தமிழ் சப்பாகவும் இருக்க தான் செய்கின்றது . அவர்கள் முதியவர்களின் வார்த்தைகளை மதிப்பதுமில்லை , ுதியவர்களின்  பண்பாட்டை கடைப்பிடிப்பதுமில்லை ,  தமிழ் பண்பாடு பற்றி அறியவோ , தொடரவோ  விருப்பற்றும் ,  ஆர்வமற்றும் உள்ளனர் .  ஆயினும் ஆங்காங்கே சிலர் தம் ொழி மீதான ஆழமான காதல்  காரணமாக பிள்ளைகளை  தமிழ் கலை நிகழ்வுகள் , இசை , நடனம்  , தமிழ் பண்டிகைகள் , விழாக்கள் , போட்டிகள் , இலக்கியப் படைப்புக்கள்இலக்கிய சந்திப்புக்கள்,  மொழி மற்றும் பண்பாடு சார் நிகழ்வுகள்  என்றும்  பல்வேறு கலை பண்பாடு சார்ந்த நிகழ்வுகளில்  பங்கு பெற்றவும் வைக்கின்றனர் .  என்பதும் ஒட்டுமொத்தமாக மறுக்க முடியாத சம்பவங்கள் ஆகும் .  இன்றைய  நவீன ஊடகங்களில் youtup ,வலைத்தளங்கள்  மற்றும்  முகநூல்கள் போன்றன  இத்தகைய  இணைய  ழி  ஊடான மொழி  வளர்ச்சியில் , மொழிப் பிரசாரத்தில் பெரிதும் ங்கெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது . தமது கெட்டித் தனங்கள் ஆளுமைகளை  அவற்றின் னூடாக  பதிவேற்றம் செய்து  ஏனையவர்களும் பயன் பெரும் வகையில் அவை புரட்சியையும் புரிகின்றன என்றால்  மிகையல்ல.
. .முகநூல் பயன்படுதுவதாயின் கட்டாயம் ஆங்கிலம் தான் தெரிய வேண்டும் என்று இல்லைதமிழ்தமிங்கிலம், [ தமிழை    ஆங்கில உச்சரிப்பில்  டைப் செய்வது. ] என்றும் அவை பதிவாகின்றனமேலை நாடுகளில் ஆங்கிலமும் , அவர்கள் தம் தாய் மொழியும் இருந்தாலும் அணைத்து நாடுகளிலும் தமிழர்கள்பரவி வாழ்வதனால் அவர்கள் தமிழை வளர்க்க அரும் பாடு பட்டு வரும்,  கடந்த காலங்களை விட அண்மைக் காலமாக பத்து வருடங்களுக்கும் மேலாக அதிவேகமான  வளர்ச்சியில் தமிழ் மொழிப் பயன்பாடு  இணைய தளங்கள்முகநூல் ஆகியவற்றின் பங்கு அளப்பரியது .தமிழ் எழுத்து என்பதற்கு இனியும்தமிழர்கள் மட்டும் சொந்தக் காரர்கள் ல்லை , தமிழக அரசு , ,  பன்னாட்டு கணினித் தர அமைப்புக்கள் [ ஒருங்குறி சேர்த்தியம் போன்றவை ]  கணினி /கைப்பேசி தயாரிப்பாளர்கள் . உருவாக்குபவர்கள் ,  எழுதுபவர்கள் என்று  மொழிகள் னைத்துக்கும் சொந்தம் கொண்டாடத்  தொடங்கி விட்டனர் . எனஇணைய பயன்பாட்டின் தமிழ் தொடர்பாக  தன்னுடைய  வலைப் பதிவில் பத்திரிகையாளர்  பத்திரிசெஸ்திரி குறிப்பிட்டுளார் . இதே போன்று சிங்கப்பூரில் கவிமாலைஇலக்கிய வட்டம்இலக்கியக் களம்மக்கள் கவிஞர் மன்றம் , மாதவி கலை இலக்கிய மன்றம் போன்றன  தமிழ் ொழியை வளர்ப்பதில்  மிக நீண்ட ுயற்சிகளை செய்து வருகின்றனஅந்தவகையில்  தமிழ் மணி  பத்திரிக்கை ஆசிரியர்   .பி . இராமன் அவர்களும் அவரது தமிழ்நட்பு வட்டங்களும் இணைந்தே  முகநூல் ஊடாக பெரும் தமிழ்ப் புரட்சியினை  ற்படுத்தி வருகின்றனர்
 ‘’ தகவல் ஊடகங்கள் இன்று பல்வேறு ுகங்களைக் கொண்டு இயங்கி வருகின்றது 
தமிழில் பத்திரிகைகள் தோன்றியது ஒரு தற்செயல் காது கேளா மனைவிக்கு கருவி செய்யப் புறப்பட்ட ிரகம் பெல் தொலை பேசியைக் கண்டு பிடித்ததுபோல , சமய பிரச்சாரத்திற்காக தோன்றிய பத்திரிகைகள்  சங்க இலக்கியம் பேசி ,  பின்  வேற்று அரட்டையில்  வீணாய்க் காலம் போக்கி ,திடீரென  விழித்தெழுந்து விடுதலைக்கு பிரசாரம் செய்து , இடையிடையே இலக்கியம் பகிர்ந்து , இன்றைக்கு துறைக்கு ஒன்றாய் கிளை பரப்பி நிற்கின்றன .

தமிழ் ஊடகங்கள் மொழிக்கு அளித்த  கொடைகள் 3 வகை .
1.மொழிக்கு செய்த பங்களிப்பு 
2,தமிழரின் அறிவை விரிவாக்க அவை மேற்கொண்ட  / மேற்கொள்ளும்  முயற்சி 
3வாசிப்புப் பழக்கத்துக்கு தந்த ஊக்கம் .

வதந்தி ஆனாலும் பரவாயில்லை அதை விரைந்து தா  என்ற மக்களின் செய்தி தாகத்தை தணிப்பது  சமூக ஊடகங்கள் என அழைக்கப் படும்  தனி நபர்ஊடகங்களான  முகநூலும் , டுவிட்டரும் ஆகும் . 

வானொலி அறிமுகமான போது  அது நாளிதழ்களை அளித்து விடும் எனக் ருதப்பட்டது . தொலைக் காட்சி வந்த போது  வானொலி தேவையற்றதாகி ிடும்எனக் கருதப்பட்டது . இணைய தளங்கள் தொலைக்  காட்சிகளை  விட விரைவாக செய்தி அளித்தால்  தொலைக் காட்சிகளில் யுகம் முடிந்து விடும்  எனச்சொன்னார்கள் , லைப் பூக்கள் , பேஸ்புக் , டுவிட்டர் , போன்ற சமூக ஊடகங்களில்  உடனடிக் கருத்துப் பரிமாற்றம் சாத்தியம் என்பதால்  இணையச் செய்தித்தளங்களுக்கு இனி அவசியம் இருக்காது எனப் பேசினார்கள் . னால் இன்று எல்லாம் ஒன்றுடன் ஒன்று பிரிக்க இயலாத நிலையில் இயங்கும் ஒரு செய்திஉலகம் உருவாகி  யுள்ளது அது வசதிக்கேற்ப தேர்ந்து கொள்ள பொது மக்களுக்கு  அநேக வாய்ப்பளிக்கிறது . எனக் குறிப்பிடும்பத்திரிகையாளர்பத்திரிகையாளர்மாலன்
மேலும் '' இன்று ஊடகங்கள் பயனர்களை  எதிர் கொள்கின்றன .தங்களுடைய மின் உரையாடல்களில் குறுந்தகவல்கள்  , முகநூல் , நிலைத் கவல்கள் ,வலைப் பதிவுகள் , , இணையப் பக்கங்களில் பயன்படுத்திக் கொள்ள தகவல்களை ஊடகங்களில் எதிர் பார்க்கின்றார்கள் . இன்று பல இணையத் தளங்களுக்குசமூக ஊடகங்களுக்கும் விஷிய தானம் செய்பவர்களாக அச்சிதழ்கள் தான் இருக்கின்றன  என்பதும் , அதே நேரம் பல பத்திரிகைகள் மின்னணுஊடகங்களாள்  மூடப்படும் நிலை ஏற்பட்டு இருப்பதும் இன்று ஊடக உலகில் நிலவும் ஓர் விசித்திரம் .'என்றும் குறிப்பிடுகின்றார்    [ மாலன் இணையம் ]

முகநூலில்  தமிழ் இலகுவாகப் புரியும்தமிழில் அர்த்தம் உண்டு . பதிவு , தரவிறக்கம்  என்பவற்றால் தமிழ் சமூகத்தினால் தமிழில் உரையாட முடிகின்றது

குத்து விளக்கு  என்றால் ....ஆங்கிலத்தில் லாம்ப்  என்று தான் இருக்கும் , அது மின்சார விளக்கையும் குறிப்பிடும் . ஆனால் தமிழில் ஒவ்வொன்றுக்கும்ஒவ்வொரு ெயர் உண்டு
தமிழ் விரிவான மொழி ஆனால் இலகுவில் பேசக் கூடிய இனிமையான மொழி . தமிழ் மொழியை வளர்க்க இணையங்கள் மிக உன்னதமாக உள்ளது.குறிப்பாக முகநூலையும் குறிப்பிடலாம். 

அம்மா  [amma ] என்று டைப்  பண்ணினால்  அம்மா  வரும்வரி வடிவம் வேறாக  வந்தாலும் உச்சரிப்பு முக்கியம்.  சுவிஸில் நிறைய பேர் தமிழ் வாசிக்க , படிக்கதொடக்கி விட்டனர்

தமிழ் நிகழ்வுகள்விளம்பரங்கள்பத்திரிகைகள் தமிழில் வருகின்றதுடொச் காரருக்கு நிகழ்வுகளை  தமிழ் அழைப்பிதழுடன் இணைத்து டொச்   அழைப்பிதல்கொடுக்கப்படுகிறது.தமிழ்  மக்கள் வாழும் இடமெங்கும் விளம்பரம் உட்பட அனைத்தும் தமிழில் தான் உலா வருகிறது

வெள்ளைக் காரன் கூட '' வணக்கம் '' என்று தமிழில் சொல்வதும் உண்டு . அடுத்த சந்ததி தமிழ் இல்லாமல் போகப் போகிறது என்று புலம்புகின்றனர் . அதுசுவிஸ் இல் இளையோரிடம் கையளிக்கப் பட்டுள்ளது.இப்பவே தமிழ் நிகழ்வுகள் தொடக்கம் , பாடசாலை , விழாக்கள் என்று யாவும் இளையோர் குழுசெயற்படுத்தி  வருகிறது .

உதாரணமாக  , தமிழக சினிமாவில் யிர்ப்புடன் , இலக்கண இலக்கியங்களுடன் , வரன்முறையான  தமிழ் மொழி  பயன்படுத்தப் படுமாயின்  அதுவே பெரும்விடயம் . ஏனெனில் தமிழ் சினிமாடிவி நாடகங்களின் தாக்கம் தமிழ் நாட்டை விட புலம் ெயர் தமிழர்களின் கனவுத் தொழித் சாலையாகயாகவும் உள்ளது.  என்கின்றார்  சுவிஸ் ஊடகவியலாளர் சுயர்சன் . 

புதுச்சேரி இணையத்தில் [ இன்பத் தமிழ்தமிழ் இணைய  திங்களிதழ் ] 

பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'என்கின்றார் ஆசிரியர் வா.ஆ.கிரிதரன் ]

6. நிறைவாக

..குறிப்பாக தமிழ் நாட்டிலும்இலங்கை , மற்றும் தமிழர்கள்  வாழும் புலம் பெயர் தேசம் எங்கும்  தமிழில் முகநூலைப் பயன்படுத்தும்  வரப்பிரசாதம் கிடைத்துள்ளது . பொதுவாக bloge , மற்றும் வலைத் தளங்களை பயன் டுத்தும்  போது அதன்  பெயர் தெரியாமல் சாதாரணமானவர்கள் வலைத் தளப் பதிவுகை பார்வை இட முடியாது . ஆனால் முகநூல் பயனரின்  பெயரை பதிவு செய்ததும் பல தகவலில்  பயணிக்க செய்கின்றது . 

இணைய தொழில் நுட்பத்தினால் அச்சு ஊடகங்களில் தமிழ்  மொழிப் பயன்பாடு குறைவடையப் போகின்றது  ன்று மிரட்சி கொண்டவர்களையும் , தன்னுள் இணைத்து அச்சு இதழ்களுக்கும் களம் கொடுத்துள்ளது.
அத்துடன் தமிழை வளர்ப்பதுக்கான ஊடகமாக உள்ளதுநிறைய தமிழ்க் ுழுக்கள்நிறைய புத்தகங்கள்  ின்னணு வாக வருகிறது ,  உதாரணமாக சித்தர் அறிவியல்  குழுஅடவி இதழ்,  கலகம்,  மகுடம்ஞனம் , பூவரசி, .காற்றுவெளி , வளரி , . திண்ணை,புதுச்சேரி  போன்ற ......இணைய  தளங்கள்நிறைய வீடியோஇசை ட்டுக்கள்  குறும்படங்கள்  தொலைக்காட்சி படம்டிவி நாடகம்  என்று யாவும் பதிவு செய்யும் வகையில் ,  விடயங்களை தமிழில் அறியும் வகையில்  வரலாற்று ஆவணங்களாகவும்  பதிவு செய்யப் படுகின்றன . அந்தவகையில்  உலக வலையமைப்பில்  முகநூல்ஊடான  தொடர்பாடலில்  தமிழ்  மொழிப் பிரயோகம்  மிக புரட்சி மிக்க நிலையில் உள்ளமை தமிழ் மூகத்துக்கான வரப்பிரசாதம் ஆகும் . இங்கு தொடர்பாடல் ஊடகமாக முகநூலும்  தமிழும் இயங்குவதே முக்கிய காரணி ஆகும் .


உசாத்துணை ..

விக்கிப் பீடியா 
புதுச்சேரி இணையம் , 
மாலன் இணையம் 
திசை காட்டி  இணையம் 
பத்திரி செச்திரி இணையம் 
தினமணி  விவாத மேடை [ இணையம் ] 
நக்கீரன் இணையம் 


நேர்காணல் 
கலைச்செல்வன் 
சுயர்சன் 
மதுசன் 
தினேஷ் .

 தர்மினி பத்மநாதன் . ma / mphil 


பயன்பாட்டுத் துறையில்  துறை தோறும்  தமிழ்
பன்னாட்டுக் கருத்தரங்கம்  2014
எத்திராஜ் மகளீர் கல்லூரி , சென்னை
யில்  நிகழ்ந்த போது  வாசிக்கப் பட்ட கட்டுரை