தொடர்பியல் ஊடகமான முகநூலில் ப யன்பாட்டு தமிழ்.
1.அறிமுகம்
ஆரம்ப கால மக்கள் , ஆடல் பாடல் , அசைவு என்று தங்கள் வெளி ப்பாட்டு ஊடகமாக ஓவியம் , சி த்திரம், பாட்டு , நடனம் ., நா டகம் .. போன்றவற்றை தொடர்பாடல் ஊடகங் களாகக் கண்டு பிடித்ததில் ஆரம் பித்து இன்று வரை அவனின் ஒவ்வொ ரு அசைவுகளும் இலத்திரனியல் த ொழில்நுட்பம் வரை தொடர்பாடலில் புரட்சி கண்டுள்ளது .
விஞ்ஞரனம் , தொழில் நுட்பப் பு ரட்சிகளால் தனித் தமிழ் , மற்று ம் தமிழ் சமுகம் சிதைவடைந்து வர ுகின்றது என்ற கருத்தியல் அனை த்து மக்களிடமும்அனைத்து மக் களிடமும் அண்மைக் காலங்களில் உ யிர்ப்பெற்று வருகின்றது.
இவ்வாறான அவலக் குரல்எழுப்பு பவர்களாலே இத்தகைய சிதைவுகளை ச ீர் செய்ய முடியாத மன அழுத்தங் கள் , நெருக்கடிகள் ஏற்படுவதும் குறையவில்லை. ஆயினும் ஒவ்வொரு தொழில் நுட்பங்களும் பயன்படுது பவனின் மனநிலை சார்ந்தே நன்மை , தீமைகளை தீர்மானிக்க முடியும் . அந்தவகையில் சமுதாய வலைத் த ொடர்பு ஊடகமான முகநூலில் தமிழ் மொழிப் பயன்பாடு என்பதை அடி ப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு கட்டுரை அமைகின்றது .
2. முகநூல் என்றால் என்ன?
முகம் +நூல் என்பதை புலப் படுத் துகிறது. அகத்தின் அழகு முகத்தி ல் தெரியும் என்ற கருத்து நிலை இன்று அகத்தின் அழகு முக நூலி ல் தெரியும் என்கின்றவகையில் பர ிமாணம் கொண்டுள்ளது . முக நூல் , முகப் புத்தகம், என ்றும் பொருள் கொள்ள முடியும். ஒ வ்வொரு மனித சமுதாயத்தினதும் , முகவரிகளை அவர்களுக்கும் தெரியா மலே உள்ளார்ந்து வைத்துள்ளது.
. இணையத் தொழில் நுட்பத்தின் புரட்சிகர வளர்ச்சியில் முக நூ லின் பங்கு உன்னதமானது . ஏனைய இணையத் தளங்களில் , இணையஇ தழ்கள் ஆகியவற்றில் பதிவுகள் , கருத்தை பதிவு செய்ய வெளிப்படு த்த எத்தனையோ ஆயிரங்களும் செ லவாகும் .இன்று மிக இலகுவாக மு கநூல்ஊடாக பதிவு செய்ய முடிகி ன்றது . வசதி வாய்ப்புள்ளவர்கள் முன்பு நூல்களை வெளியீடு செய்தனர் . இப்போ எல்லோர் கைகளிலும் ஒட் டிப் பிறந்தகுழந்தையாக கைபேசி இ ருப்பதனால் , கிராமங்களை கூட இண ையங்கள் ஆக்கிரமித்து விட்டது . ஆயினும் அதில் முகநூல் ஒருவரி ன் மனநிலையை மிக மிக ஒரு நோயார் ந்த போதை நிலைக்கும் கொண்டு செ ல்கின்றது .
blogs , மற்றும் ஏனைய இணைய ஊடகங்கள் ஒழுங்கு முறையில் உள்ளது.ஆனா ல் முக நூல் பல்வேறு விடயங் களையும் எந்த தயக்கமுமின்றி ஆவணப்படுத்தும் ஒரு நூலகமாக உள்ளது . அச்சு ஊடக ங்கள் , தொலைக்காட்சி ஊடகங்களி ல் ஒரு பதிவை மேற்கொள்ளும் நா ம் அவற்றை மீள் உருவாக்கம்செய் வது அவளவு இலகு அல்ல. ஆனால் சமு தாய வலைத் தளங்களை பயன்படுத்து ம் போது எமது விருப்புக்களை , சிந்தனைகளை உடனுக்குடன் மாற்றம் செய்து கொள்ளவும் மொழிப் பயன்பா டு இலகுவாக்கப் பட்டுள்ளது .இங் கு தனி மனித அந்தரங்கங்களுக் கு பாதுகாப்பு இல்லை என்றும் ஆய ்வாளர்கள்எச்சரிக்கை செய்கின் றனர் . இது பற்றி சென்னைப் பல்கலைக் கழக தொடர்பியல் துறை தலைவர் பேரா . ரவீந்திரன் அவர்கள் குறி ப்பிடும் போது '' முகநூல்போன் றவற்றில் அங்கத்தவர் ஆவதற்கு பொது அந்தரங்கம் சார்ந்த பல வி டயங்களை பதிவு செய்கிறோம். இந்த பதிவு செய்யப் பட்ட பதிவுகள் எ வ்வாறு பதிவுசெய்யப் படுகின்றன என்பது கேள்வியே . பன்னாட்டு நி றுவனங்கள் நம் அந்தரங்க விடயங் களை ஓர் வியாபாரத் தளத்துக்கு க ொண்டு வரும் போது மற்றவர்கள் பா ர்வைக்கு வெளி வர வாய்ப்பு உண் டு . அப்பொழுது பாதுக்காக எந்த முகாந்தரமும் இல்லை . '' என்கின்றார். ஏனெனில் அவர் களை தமிழ்மொழித் தொடர்பு மிக எ ளிய முறையில் பயன்பாட்டை அடை யாள படுத்தி உள்ளது என்றே கொள்ள முடிகின்றது .
3. ,முக நூலின் தோற்றமும் .வளர் ச்சியும்
பேஸ் புக் 2004 இல் தொடங்கிய இ ணைய வழி சமூக வலையமைப்பு நிறு வனம் ஆகும். ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவர் மார்க் சக்கர பார்க்ஹாவார்ட் மாணவர்களு க்கு ஆரம்பித்ததில் தொடங்கி செ யல் முனைப்பு பெற்றுள்ளது .
2008 இல் முகநூளின் தமையகம் அய ர்லாந்து நாட்டின் டப்ளின் நகரி ல் தொடங்கப் பட்டது . பின்பு 2011 இல் முகநூலின் தலைமையகம் ம ென்லோ பார்க் ,கலிபோர்னியாவுக் கு மாற்றப் பட்டது.
சமூக வலைத் தளங்கள் ஊடாக செய் தியளிப்பு தீவிரமடைந்து உள்ளது . இன்று தொழில் நுட்பங்கள் பயன ர்களையே செய்தியாளர்களாக்கி உள ்ளது. இவர்கள்தமக்கான தளங்களை த ாமே உருவாக்கிக் கொள்கின்றனர் .
புரட்சிகர தொழில் நுட்பங்கள் நம ் சமூகத்தின் மத்தியில் பெரும் ஐயங்களை ஏற்படுத்தி உள்ளது . க லாசார சீர் குழைவு , தமிழ் மொழி சிதைவு என்றெல்லாம்பலரும் பல கருத்தாடல்களை புரிவதும் நம் கண ் முன் நிகழ்ந்த வண்ணம் உள்ளது . ஆயினும் தமிழ் மொழி சிதைக்கப் படும் என்றோ , தமிழ் அச்சு ஊடக ம்ஒழிந்து விடும் என்றோ நாம் ப ுரிதலற்று பேச முடியாது . தொழில் நுட்பங்கள் தமிழ் மொழி க்கான ..... மென் பொருட்களை
உருவாக்குவதன் ஊடாக அவை இன்னு ம் இன்னும் பரிமாற்றம் அடையும் வாய்ப்புக்களே அதிகம் . பல படை ப்பாளிகளை , ஆளுமைகளை , தமிழ் ஊ டாகஉருவாக்கியும் உள்ளது. புகை ப்பட கலைஞன் , கட்பனையாளன், இயக ்குனர், இசையாளன், எழுத்தாளன், என்று பல துறைகள் வளரவும் இங் கு தமிழ் உபயோகம் அதிகம் . . நாளைய பத்திரிக்கை செய்திகளை கூட இன்றைய நிமிடச் செய்திகளாக பதிவு செய்வதில் பெரும் போட்டி நிலை கூட உள்ளது. இந்தமொழிப் ப ிரயோகம் ஆங்கிலத்தில் இருக்குமா யின் . இத்தகைய ஒரு புரட்சியை முகநூலினால் செய்திருக்க முடி யாது
4. தமிழ் மொழி
தமிழ் மொழி தமிழர்களினதும் , தம ிழ் பேசும் பலரதும் தாய் மொழி ஆ கும் . இலங்கை யின் வடக்கு கிழக்கு மாகாணம், கொழு ம்பு, திருகோணமலை, மலையகம் போ ன்ற இடங்களிலும் , இந்தியா ,
மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடு களில் அதிகளவிலும் , ஐக்கிய அரபு அமீரகம் , தென்னா பிரிக்கா ,
மொரிசீயஸ் போன்ற நாடுகளில் சி றிய அளவிலும் தமிழ் பேசப்பட் டு வருகின்றன [ விக்கி பிடியா ]
தமிழ் மொழி இனம் சார்ந்தது . ஒரு இனத்தின் அடையாளம் ஆகும். தமிழ் நாட்டில் , தமிழீழத்தில் தமிழோடு வாழ்ந்து , தமிழில் பேசி தமிழ்ப் பண்பாட்டைக் கடைப்பிடிப்பவர்கள் தமிழர்கள் . தமிழை வேராகக் கொண்ட இரு நாடுகளிலும் தமிழ் சிதைவுறும் அவலத்தை இரு இரு நாட்டு அரசுகளும் திட்டமிட்டு செய்கின்றன. [ vikki peediyaa] அதற்காக நாம் அப்படியே விட்டு விட முடியுமா?
5, முகநூலில் தமிழ் பயன்பாடு
தமிழ் மொழி இந்தியாவில் தமிழ் ந ாட்டிலும் , இலங்கை , சிங்கபூர் , மலேசியா போன்ற நாடுகளில் அ திகார மொழியாகவும் உள்ளது . இது தவிர பல உலகநாடுகளில் தமிழ் மொ ழி பேசுவோர் வாழ்ந்து வருகின் றனர்
கடந்த பத்து வருட காலத்தினுள் ம ுகநூலின் பாவனை காட்டுத் தீயா னது . தகவல் தொழில் நுட்ப உலகி ல் , இன்றி அமையாத சாதனமாகக் கூட இந்தமுகநூல் பாவனை அமைந்திருப் பது மிகை அல்ல . பாடசாலை மா ணவர் தொடக்கம் பெரிய பெரிய இலக் கிய கர்த்தா வரை முக நூலை பயன்ப டுத்துகின்றனர் . அவர்கள் பயன் படுத்துவது மட்டுமன்றி எழுத்தா ளனாக , படைப்பாளனாக , அறிவியலா லனாக , விமர்சகனாக என்று பல்வே றுபாத்திரங்களையும் பெற்றுக் க ொள்ளக் கூடிய ஆளுமைகளை பெற்றுக் கொள்ளவும் இங்கு தமிழ் மொழி ப யன்பாடு மிக முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
நவீன யுகத்தில் தமிழ் சமூகத்து க்கு கிடைத்த மிகப் பெரும் வ ேகமாக தகவல் பரிமாற்ற தொடர்பா டல் ஊடகமாக முகநூல் புரட்சிகர மாற்றங்களைக்கண்டுள்ளது . பல் வேறு பட்ட இணையங்கள் போன்றவற்று டன் இணைந்து அவர்கள் கருத்து க்கள், எண்ணங்கள், ஆதங்கங்கள் , சந்தோசங்கள், துக்கம்,விவாதம் , புரட்சி , குமுறல்கள் , கற் பனைகள் , கனவுகள். மட்டுமன்றி. செய்திகள், ஆய்வுகள், கருத்துக் கள், புகைப்படம், வீடியோ , வி ளம்பரம், மருத்துவம் ,கல்வி , த ிருமணம் , போட்டிகள், கவிதை, கட்டுரை, கு றும்படம், இசை, நடனம், நாடகம், புகைப்படம்,.தொழில் .....என்று யாவற்றையும் மனம் திறந்துவெளிப் படுத்தும் ஊடகமாக முக நூல் உள் ளது.
முகநூல் நட்புக்களை இணைத்துக் க ொள்ளுதல் என்பதனை அடிப்படையா கக் கொண்டு இன்று இதன் பரிமா ணம் விரிவாக்கம் பெற்றுள்ளது . இது இளம் சமூகத்தினிடையே பெரு ம் சவாலாக் உள்ளது .தொழில் நுட் ப வளர்ச்சி இன்று யாரையும் யாரு ம் தொடும் அளவிற்கு சுருக்கி வை த்துள்ளது .ஒருவருன்பதிவுகளான எண்ணங்கள், கதைகள், படங்கள், கல்வி, தொழில் என்பன அவர் பற் றிய எண்ணப் பாடுகளை , நோக்கம் , குறிக்கோள் , நட்புக் குழுக் கள் ,நட்பின் தரம் , அரசியல் போன்ற பின் புலன்களை கண்டறியவு ம் உதவுகின்றது.
பண்பாடு,கலாச்சாரம்கொண்டதமிழ் மொழியினைத் தாயகமாகக் கொண்டு தமிழகமும் ஈழமும் விளங்குகின்றது . ஈழத்தில் இனரீதியான மொழிரீ தியான யுத்தத்தினால் தமிழ் மக் கள் பெருமளவில் புலம் பெயர்ந்து அனாதரவாகி ஏதிலிகளாக உலகின் நாளா புறமும் வாழத் தொடங்கி னார்கள் . ஈழப் போருக்கான முக் கிய காரணமே இந்த இன மொழிப் போ ர் தான் இந்த இனப் போர் இல்லை என்றால் தமிழன் என்று ஒரு இனம் இருந்தது என்றஅடையாளமே இல்லா மல் போயிருக்கும். தமிழன் என் பதற்காகவே அடக்கப் பட்டான் , ஒ டுக்கப் பட்டான் , கொல்லப் பட் டான், கொலை செய்யப்பட்டான் ,கடத ்தப் பட்டான் , கைது செய்யப் பட ்டான் , காணாமல் போனான், , கரு கலைக்கப்பட்டாள் , வன்மு றைக் குள்ளானாள் , இடம்பெயர்ந் தான், புலம் பெயர்ந்தான் , ஏமாற்றப்பட்டான் , அகதியானான் ...என்பது மட்டுமன்றி ,சொத்து க்களும் , சொந்தங்களும் , பந்தங்களும் ப றிக்கப் பட்டன , வீடு அற்றவர் களாகவும், நாடு அற்றவர்களாகவும் நடுத் தெருவில் விடப்பட்டனர் . இன் நிலைமையிலும் ஈழத்தமிழன் தாய் மொழிக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் வாழ் முழுக்க போராட வேண்டியவனாகவே உள்ளான் . இந்த உணர்வின் வலிகளே இன்னும் இன்னும் பாடுபொருள்களாக முகநூ லை அலங்கரிக்கின்றன . அமெரிக்கா , கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத் து இந்தியா , மற்றும் ஈழம் ம ுகநூல் பாவனையில் முன்னணி வகி க்கக் காரணம் தமிழ்மொழிப் பயன் பாடே ஆகும். .
மிக அண்மைக் காலங்களில் பெரும் பாலும் 1995 களின் பின்பு இலங் கையின் இனவழிப்பு காரணமாக அகதி களாக இடம் பெயர்ந்தும் , , தொழில்களின் நிமித்தம், கல்வி மற்றும் திருமண பந்தங் கள் ஊடாக பல ஈழத் தமிழர்கள் இ ந்தியா, கனடா, இலண்டன் , பிரான் ஸ் , அவுஸ்திரேலியா, சிங்கப்பூ ர் , மலேசியா , சுவீஸ், நோர்வே . என பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின் றனர் . இந்திய மக்கள் தொழில் , கல்வியின் நிமித்தம் வெளி நாடு களில் வாழ்ந்து வருகின்றனர் . இ த் தகைய நாடுகளில் பழைய தலைமுறை கள் மற்றும் ஓரளவு இரண்டாம் தல ைமுறைகள் தமிழ் மொழியை உயிர்ப் புடன் பேணி வந்தாலும் , புதிய த லைமுறைகளுக்கு / , இளம் தலை முறைகளுக்கு தமிழ் க சப்பாகவும் இருக்க தான் செய்கி ன்றது . அவர்கள் முதியவர்களின் வார்த்தைகளை மதிப்பதுமில்லை , ம ுதியவர்களின் பண்பாட்டை கடைப் பிடிப்பதுமில்லை , தமிழ் பண்பாடு பற்றி அறியவோ , தொடரவோ விருப்பற்றும் , ஆர்வமற்றும் உள்ளனர் . ஆயினும் ஆங்காங்கே சிலர் தம் ம ொழி மீதான ஆழமான காதல் காரணமாக பிள்ளைகளை தமிழ் கலை நிகழ்வு கள் , இசை , நடனம் , தமிழ் பண் டிகைகள் , விழாக்கள் , போட்டி கள் , இலக்கியப் படைப்புக்கள், இலக்கிய சந்திப்புக்கள், மொழி மற்றும் பண்பாடு சார் நி கழ்வுகள் என்றும் பல்வேறு கலை பண்பாடு சார்ந்த நிகழ்வுகளில் பங்கு பெற்றவும் வைக்கின்றனர் . என்பதும் ஒட்டுமொத்தமாக மறு க்க முடியாத சம்பவங்கள் ஆகும் . இன்றைய நவீன ஊடகங்களில் youtup ,வலைத்தளங்கள் மற்றும் முகநூ ல்கள் போன்றன இத்தகைய இணைய வ ழி ஊடான மொழி வளர்ச்சியில் , மொழிப் பிரசாரத்தில் பெரிதும் ப ங்கெடுத்து வருவதும் குறிப்பி டத்தக்கது . தமது கெட்டித் தனங் கள் ஆளுமைகளை அவற்றின் னூடாக பதிவேற்றம் செய்து ஏனையவர்களு ம் பயன் பெரும் வகையில் அவை பு ரட்சியையும் புரிகின்றன என்றால் மிகையல்ல.
. .முகநூல் பயன்படுதுவதாயின் கட் டாயம் ஆங்கிலம் தான் தெரிய வேண் டும் என்று இல்லை. தமிழ், தமிங் கிலம், [ தமிழை ஆங்கில உச்சரிப்பில் டைப் செ ய்வது. ] என்றும் அவை பதிவாகின்றன. மே லை நாடுகளில் ஆங்கிலமும் , அவர் கள் தம் தாய் மொழியும் இருந்தா லும் அணைத்து நாடுகளிலும் தமி ழர்கள்பரவி வாழ்வதனால் அவர்கள் தமிழை வளர்க்க அரும் பாடு பட்டு வரும், கடந்த காலங்களை விட அண ்மைக் காலமாக பத்து வருடங்களுக் கும் மேலாக அதிவேகமான வளர்ச்சி யில் தமிழ் மொழிப் பயன்பாடு இண ைய தளங்கள், முகநூல் ஆகியவற்றி ன் பங்கு அளப்பரியது .தமிழ் எழு த்து என்பதற்கு இனியும்தமிழர் கள் மட்டும் சொந்தக் காரர்கள் இ ல்லை , தமிழக அரசு , , பன்னாட்டு கணினித் தர அமைப்பு க்கள் [ ஒருங்குறி சேர்த்தியம் போன்றவை ] கணினி /கைப்பேசி தயாரிப்பாளர் கள் . உருவாக்குபவர்கள் , எழுதுபவர்கள் என்று மொழிகள் அ னைத்துக்கும் சொந்தம் கொண்டாடத் தொடங்கி விட்டனர் . எனஇணைய பய ன்பாட்டின் தமிழ் தொடர்பாக தன் னுடைய வலைப் பதிவில் பத்திரிகை யாளர் பத்திரிசெஸ்திரி குறிப் பிட்டுளார் . இதே போன்று சிங்கப்பூரில் கவிமாலை, இலக்கிய வட்டம், இலக்கியக் களம், மக் கள் கவிஞர் மன்றம் , மாதவி கலை இலக்கிய மன்றம் போன்றன தமிழ் ம ொழியை வளர்ப்பதில் மிக நீண்ட ம ுயற்சிகளை செய்து வருகின்றன. அந ்தவகையில் தமிழ் மணி பத்திரி க்கை ஆசிரியர் எ .பி . இராமன் அவர்களும் அவரது தமிழ்நட்பு வட் டங்களும் இணைந்தே முகநூல் ஊடாக பெரும் தமிழ்ப் புரட்சியினை ஏ ற்படுத்தி வருகின்றனர்.
‘’ தகவல் ஊடகங்கள் இன்று பல்வேறு ம ுகங்களைக் கொண்டு இயங்கி வருகி ன்றது
தமிழில் பத்திரிகைகள் தோன்றியது ஒரு தற்செயல் காது கேளா மனைவி க்கு கருவி செய்யப் புறப்பட்ட க ிரகம் பெல் தொலை பேசியைக் கண்டு பிடித்ததுபோல , சமய பிரச்சாரத் திற்காக தோன்றிய பத்திரிகைகள் சங்க இலக்கியம் பேசி , பின் வேற்று அரட்டையில் வீணா ய்க் காலம் போக்கி ,திடீரென வி ழித்தெழுந்து விடுதலைக்கு பிரசா ரம் செய்து , இடையிடையே இலக்கி யம் பகிர்ந்து , இன்றைக்கு துறை க்கு ஒன்றாய் கிளை பரப்பி நிற் கின்றன .
தமிழ் ஊடகங்கள் மொழிக்கு அளித்த கொடைகள் 3 வகை .
1.மொழிக்கு செய்த பங்களிப்பு
2,தமிழரின் அறிவை விரிவாக்க அவை மேற்கொண்ட / மேற்கொள்ளும் மு யற்சி
3வாசிப்புப் பழக்கத்துக்கு தந்த ஊக்கம் .
வதந்தி ஆனாலும் பரவாயில்லை அதை விரைந்து தா என்ற மக்களின் செ ய்தி தாகத்தை தணிப்பது சமூக ஊட கங்கள் என அழைக்கப் படும் தனி நபர்ஊடகங்களான முகநூலும் , டு விட்டரும் ஆகும் .
வானொலி அறிமுகமான போது அது நா ளிதழ்களை அளித்து விடும் எனக் க ருதப்பட்டது . தொலைக் காட்சி வந ்த போது வானொலி தேவையற்றதாகி வ ிடும்எனக் கருதப்பட்டது . இணைய தளங்கள் தொலைக் காட்சிகளை விட விரைவாக செய்தி அளித்தால் தொ லைக் காட்சிகளில் யுகம் முடிந் து விடும் எனச்சொன்னார்கள் , வ லைப் பூக்கள் , பேஸ்புக் , டுவி ட்டர் , போன்ற சமூக ஊடகங்களில் உடனடிக் கருத்துப் பரிமாற்றம் சாத்தியம் என்பதால் இணையச் செ ய்தித்தளங்களுக்கு இனி அவசியம் இருக்காது எனப் பேசினார்கள் . ஆ னால் இன்று எல்லாம் ஒன்றுடன் ஒன ்று பிரிக்க இயலாத நிலையில் இயங ்கும் ஒரு செய்திஉலகம் உருவாகி யுள்ளது அது வசதிக்கேற்ப தேர் ந்து கொள்ள பொது மக்களுக்கு அந ேக வாய்ப்பளிக்கிறது . எனக் கு றிப்பிடும்பத்திரிகையாளர்பத்தி ரிகையாளர்மாலன்
மேலும் '' இன்று ஊடகங்கள் பயனர் களை எதிர் கொள்கின்றன .தங்களு டைய மின் உரையாடல்களில் குறுந் தகவல்கள் , முகநூல் , நிலைத் த கவல்கள் ,வலைப் பதிவுகள் , , இணையப் பக்கங்களில் பயன்படுத் திக் கொள்ள தகவல்களை ஊடகங்களில் எதிர் பார்க்கின்றார்கள் . இன் று பல இணையத் தளங்களுக்கு, சமூக ஊடகங்களுக்கும் விஷிய தானம் செ ய்பவர்களாக அச்சிதழ்கள் தான் இர ுக்கின்றன என்பதும் , அதே நே ரம் பல பத்திரிகைகள் மின்னணுஊடக ங்களாள் மூடப்படும் நிலை ஏற் பட்டு இருப்பதும் இன்று ஊடக உலக ில் நிலவும் ஓர் விசித்திரம் .' ' என்றும் குறிப்பிடுகின்றார் [ மாலன் இணையம் ]
முகநூலில் தமிழ் இலகுவாகப் பு ரியும், தமிழில் அர்த்தம் உண்டு . பதிவு , தரவிறக்கம் என்பவற் றால் தமிழ் சமூகத்தினால் தமிழி ல் உரையாட முடிகின்றது.
குத்து விளக்கு என்றால் ....ஆங ்கிலத்தில் லாம்ப் என்று தான் இருக்கும் , அது மின்சார விளக் கையும் குறிப்பிடும் . ஆனால் தம ிழில் ஒவ்வொன்றுக்கும்ஒவ்வொரு ப ெயர் உண்டு.
தமிழ் விரிவான மொழி ஆனால் இலகு வில் பேசக் கூடிய இனிமையான மொழி . தமிழ் மொழியை வளர்க்க இணையங் கள் மிக உன்னதமாக உள்ளது.குறிப் பாக முகநூலையும் குறிப்பிடலாம்.
அம்மா [amma ] என்று டைப் பண்ணினால் அம்மா வரும். வரி வடிவம் வேறாக வந் தாலும் உச்சரிப்பு முக்கியம். சுவிஸில் நிறைய பேர் தமிழ் வா சிக்க , படிக்கதொடக்கி விட்டனர் .
தமிழ் நிகழ்வுகள், விளம்பரங்கள் , பத்திரிகைகள் தமிழில் வருகின் றது. டொச் காரருக்கு நிகழ்வுகளை தமிழ் அழைப்பிதழுடன் இணைத்து டொச் அழைப்பிதல்கொடுக்கப்படு கிறது.தமிழ் மக்கள் வாழும் இடம ெங்கும் விளம்பரம் உட்பட அனைத் தும் தமிழில் தான் உலா வருகிறது .
வெள்ளைக் காரன் கூட '' வணக்கம் '' என்று தமிழில் சொல்வதும் உண் டு . அடுத்த சந்ததி தமிழ் இல்லா மல் போகப் போகிறது என்று புலம் புகின்றனர் . அதுசுவிஸ் இல் இளை யோரிடம் கையளிக்கப் பட்டுள்ளது. இப்பவே தமிழ் நிகழ்வுகள் தொடக் கம் , பாடசாலை , விழாக்கள் என் று யாவும் இளையோர் குழுசெயற்படு த்தி வருகிறது .
உதாரணமாக , தமிழக சினிமாவில் உ யிர்ப்புடன் , இலக்கண இலக்கியங் களுடன் , வரன்முறையான தமிழ் மொ ழி பயன்படுத்தப் படுமாயின் அத ுவே பெரும்விடயம் . ஏனெனில் தமி ழ் சினிமா, டிவி நாடகங்களின் தா க்கம் தமிழ் நாட்டை விட புலம் ப ெயர் தமிழர்களின் கனவுத் தொழித் சாலையாகயாகவும் உள்ளது. என்கின்றார் சுவிஸ் ஊடகவியலா ளர் சுயர்சன் .
புதுச்சேரி இணையத்தில் [ இன்பத் தமிழ், தமிழ் இணைய திங்களிதழ் ]
பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை,
இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள
முடிகின்றது. 'என்கின்றார் ஆசிரியர் வா.ஆ.கிரிதரன் ]
6. நிறைவாக
..குறிப்பாக தமிழ் நாட்டிலும், இலங்கை , மற்றும் தமிழர்கள் வா ழும் புலம் பெயர் தேசம் எங்கும் தமிழில் முகநூலைப் பயன்படுத் தும் வரப்பிரசாதம் கிடைத்துள் ளது . பொதுவாக bloge , மற்றும் வலைத் தளங்களை பயன் ப டுத்தும் போது அதன் பெயர் தெ ரியாமல் சாதாரணமானவர்கள் வலைத் தளப் பதிவுகை பார்வை இட முடியா து . ஆனால் முகநூல் பயனரின் பெ யரை பதிவு செய்ததும் பல தகவலில் பயணிக்க செய்கின்றது .
இணைய தொழில் நுட்பத்தினால் அச் சு ஊடகங்களில் தமிழ் மொழிப் பய ன்பாடு குறைவடையப் போகின்றது எ ன்று மிரட்சி கொண்டவர்களையும் , தன்னுள் இணைத்து அச்சு இதழ்களு க்கும் களம் கொடுத்துள்ளது.
அத்துடன் தமிழை வளர்ப்பதுக்கான ஊடகமாக உள்ளது. நிறைய தமிழ்க் க ுழுக்கள், நிறைய புத்தகங்கள் ம ின்னணு வாக வருகிறது , உதாரணமாக சித்தர் அறிவியல் கு ழு. அடவி இதழ், கலகம், மகுடம், ஞனம் , பூவரசி, .காற்றுவெளி , வளரி , . திண்ணை, , புதுச்சேரி போன்ற ......இணைய தளங்கள், நிறைய வீடியோ, இசை த ட்டுக்கள் குறும்படங்கள் தொலை க்காட்சி படம், டிவி நாடகம் என ்று யாவும் பதிவு செய்யும் வகை யில் , விடயங்களை தமிழில் அறியும் வகை யில் வரலாற்று ஆவணங்களாகவும் பதிவு செய்யப் படுகின்றன . அந் தவகையில் உலக வலையமைப்பில் மு கநூல்ஊடான தொடர்பாடலில் தமிழ் மொழிப் பிரயோகம் மிக புரட்சி மிக்க நிலையில் உள்ளமை தமிழ் ச மூகத்துக்கான வரப்பிரசாதம் ஆகு ம் . இங்கு தொடர்பாடல் ஊடகமாக முகநூலும் தமிழும் இயங்குவதே முக்கிய காரணி ஆகும் .
உசாத்துணை ..
விக்கிப் பீடியா
புதுச்சேரி இணையம் ,
மாலன் இணையம்
திசை காட்டி இணையம்
பத்திரி செச்திரி இணையம்
தினமணி விவாத மேடை [ இணையம் ]
நக்கீரன் இணையம்
நேர்காணல்
கலைச்செல்வன்
சுயர்சன்
மதுசன்
தினேஷ் .
தர்மினி பத்மநாதன் . ma / mphil
பயன்பாட்டுத் துறையில் துறை தோறும் தமிழ்
பன்னாட்டுக் கருத்தரங்கம் 2014 எத்திராஜ் மகளீர் கல்லூரி , சென்னை யில் நிகழ்ந்த போது வாசிக்கப் பட்ட கட்டுரை |