மனிதர் என்ற போர்வையில் எத்தனை விலங்குகள் இந்த சமுகத்தில் நடமாடுகின்றன என்று நினைக்கவே இந்த பூமி எதற்கு என்று கூட ஆத்திரம் வருகின்றது .
பல தடவைகள் பத்திரிகைகள் செய்தி கூறும் .
'' நடிகனின் கார் மோதி சிறுமி காயம் ''
'' வீதியால் சென்ற முதியவர் முச்சக்கர வண்டியில் மோதி காயம் '' இப்படி பல செய்திகள் பார்த்திருப்போம் . ஆனால் இப்படியான சம்பவங்களுக்கு மனிதத்தோல் போர்த்த விலங்குகள் தான் காரணம் என்பது தெளிவானது .
'' இன்று மாலை 5.5 நேரம் ஆலப் பாக்கம் மெயின் வீதியால் மாநகர சபைக்கு சொந்தமான குடி நீர் வண்டி சென்றது . வீதியோ எந்த வித ஒழுங்கும், இல்லாமல் மழை நிறைத்து குன்றும் , குழியும் சேறும் , சகதியும் என்று நீண்டது . ..... நான் பார்த்தும் இன்று நான்கு வருடங்களுக்கு மேலாக இதே கேவலத்தில் தான் இந்த வீதிகள் உள்ளது .
அப்படிப் பட்ட வீதியால் சாதாரண நடை பாதையால் போவது என்பது கூட எவ்வளவு சிரமம் என்பது அந்த பாதையால் போகின்றவர்களுக்கு புரியும் .
இந்த திறமையான வீதியில் [16.07.2013 ] நடந்து போகும் போது நேரம் 5.5 . குண்டு வெடித்தது போன்று பெரிய சத்தம் . காதில், தலையில் , காலில் , கையில் என்று பெரிய பெரிய கற்கள் விழுந்து கொட்டின . [ கற்களால் ஒருவர் தூக்கி எறிவது போன்ற உணர்வு ]
அம்மா ..............என்று காத்த தான் முடிந்தது . அந்த வண்டியின் பின்னால் வந்த யாவருக்கும் நடந்தது என்ன என்றும் தெரியும் . தெரிந்தும் யாருமே என்ன ஏது என்று ஒரு வார்த்தை கூட கேட்காதவர்களாக இருந்தனர் . ஆனால் பக்கத்து கடைகளில் இருந்து வேடிக்கை பார்த்தனர் .
வண்டியின் ரயர் புகைந்தது . அதன் பின் தான் நினைத்தேன் ரயர் வெடித்துள்ளது என்று . சில வினாடிகள் உடலும் , மனமும் ஒரு நிலைக்கு வரவில்லை .
வண்டி எந்த அசைவும் இன்றி போய்க்கொண்டு இருந்தது . பக்கத்தில் ஒரு நபரிடம் சொன்னேன் போகும் குடிநீர் வண்டியை இலக்கத்தை குறித்து தாருங்கள் என்று .
அவர் சிறு தூரம் சென்று விட்டு , வண்டி போயிட்டு என்றார் .
அந்தப் பெரிய வண்டி அவளவு வேகமாக போக முடியாது என்றேன் . எனக்கோ காலில் வீக்கம் அதிகரிக்க நடக்க முடியவில்லை . கைகளில், காலில் இரத்தம் வந்தது . கை நடுங்கியது . முகம் முழுதும் மண் பறந்து போயிருந்தது . மனம் தளரவில்லை .
வண்டியின் பின்னால் வேகமாக சென்றேன் .
சாரதியிடம் கேட்டேன்
'' வண்டிக்கு என்னாச்சு ''?
''ரயர் வெடிச்சிட்டு ''
'' வெடிச்சா அப்பிடியே விட்டு விட்டு வருவிங்களா ?
'' பக்கத்தில வாறவங்கள், போறவங்களுக்கு என்ன , எது என்று பார்க்க மாட்டிங்களா? '' என்றேன்
''அது வெடிச்சுது நான் என்ன பண்ண '' என்றான் சாரதி .
இப்படி எல்லாம் மனிதாபிமானம் பேசுகின்ற நாட்டில் எப்படி மனிதர்கள் வாழ முடியும் ?.
சாதி பேசி மனிதர்களைக் கூறு போட்டு இரத்தம் குடிக்கும் இந்த நாட்டில் '' மனிதத்தை தேடி சுழி ஓடவேண்டி இருக்கு ''
''மனசு நோகிறது,''... என்று எல்லாம் சொல்லக் கேட்டு இருப்போம் .
ஆனால் அந்த ''மனம் ,'' ''மனசு ''' எங்கு , இருக்கு என்று யாருக்கும் தெரியுமா?.
வாலி வலிமையான ஆயுதம் '' வாலி வலிமையான ஆயுதம் வாலி வலிமையான ஆயுதம் மதியம் 12 மணிக்கு போரூரில் இருந்து ஆரம்பமான பயணம் . ''வடபழனி '' வழியாக '' பெசன்ட் நகர் '' நகர் போக சரியாக 2 மணி ஐந்து நிமிடம் . வழியில் கொட்டும் மழை. வாகன நெரிசல் . இருந்தும் மரண ஊர்வலம் ஒன்று வீதியால் போய்க் கொண்டு இருந்தது . இறுதி நிகழ்வு 3.30 மணிக்கு என்பதால் இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு என்று தான் நினைப்பு . வீடு போய்ச் சேர 2.30 மணி ஆகிவிட்டது . ஆனால் தெரு எங்கும் பூக்களால் அர்ச்சிக்கப்பட்டு இருந்தது . யாருமே அங்கு இல்லை . தந்தி tv மட்டும் தங்கள் வேலை முடித்து அலுவலகம் செல்ல தயாராக இருந்தார்கள் . இனி மீதமாக இருப்பது மின் சுடுகாடு தான் . ஆட்டோ பிடித்து , வாகன நெரிசல் முடித்து,சுடுகாடு போனதில் ஆறுதல் . அதன் பின் தான் ஊர்வலம் வந்து சேர்ந்தது . படைப்பாளர்கள் , பதிப்பாளர்கள், சமுகம் என்று பலரும் அங்கு கூடி இருந்தனர் . நடிகர் ராஜேஷ் , இசை அமைப்பாளர் ' சிவமணி', நடிகர் பாக்கியராஜா , மேத்தா , வைரமுத்து இப்படி பலரும் வந்திருந்தார்கள் . வந்திருந்தவர்கள் யாவரும் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல . கோவை , திண்டுக்கல் , விழுப்புரம், திண்டிவனம், ஆவடி , அம்பத்தூர் .... போன்ற தூர இடங்களில் இருந்தும் வந்துள்ளனர் . '' வாலி அவரின் வலிமையான ஆயுதத்தால் ''இந்த சமுகத்தின் மத்தியில் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கப் போகின்றார் . ஆனால் அவரின் உயிரற்ற உடலை கடைசி நிமிடமாவது பார்த்து விட்டுப் போவோம் என்று ஆசை ஆசையாக ஓடி வந்தவர்களை அவமதிப்பது எப்படி நியாயம் ?. '' வீட்டிலாவது மோகத்தைப் பாபோமுனு ஓடி வந்தேனுங்க '' அவங்க வெளியே கொண்டு போட்டானுங்கோ ....இங்காசும் பார்க்க முடியேல ...'' ஆதங்கப் பட்டாள் முத்துலட்சுமி . '' சுத்தி பார்க்கிற வரைக்கும் நடுவ வைக்கலாமுலே '' எவங்க தான் எத சரியாப் பண்ணுற னுக ...கோவையில இருந்து வந்தன். இப்படி பலரது ஆதங்கம் இது தான் . மக்கள் அஞ்சலி செய்யும் வகையில் ஒழுங்கு படுத்தப் படவில்லை . ஆளுக்கு ஆள் தலைமை தாங்கு வதாக நின்றால் யார் தலைமை தாங்குவது . ? நெருக்கடி நிலையில் முழு இடமும் ஆண்கள் தான் ஆக்கிரமித்து இருந்தார்கள். பிரபல்யமான ஒருவர் வருகின்றார் என்றதும் நிற்பவர்களையும் பார்க்காமல் தள்ளி விழுத்தி விட்டு , பிரபல்யத்தை முன் விடுபவர்களுக்கு அங்கு காத்திருந்த பெண்கள் சமுகத்தை கண் .தெரியவில்லை . மூச்சு விட முடியாத அளவுக்கு ஒன்றும் அவளவு கோடி மக்கள் அங்கு கூட வில்லை ஆயினும் எல்லாருக்கும் ஒரு வகையில் சந்தர்ப்பம் வழங்கி இருக்க வேண்டும் . '' ஸ்ரீ ரங்கத்தில் '' சுவாமி தரிசனத்துக்கு 250 ரூபா பணம் செலுத்தி விட்டு விசேட பகுதியால் சுவாமி தரிசனம் வந்தால் , சுவாமியை பார்க்க முன் துரத்தி விடுவார்கள் . அப்படி ஒரு அனுபவமும் இங்கு கிடைத்தது . இனி எப்போ , இந்த உயிர் மீண்டும் வரும் என்று யாருக்கும் தெரியாது . ஆனால் பார்க்க விரும்பும் சமுகத்தை பார்க்க விடுவது மனித .பண்பு இந்த பண்பை வாளியில் மட்டுமல்ல .............எந்த இறுதி நிகழ்வில் '' முகத்தை பார்க்க ஓடி வந்து காத்திருக்கும் '' ஒவ்வொரு மனிதத்தையும் மதியுங்கள் என்பதே இந்த பதிவின் நோக்கம் .
நிர்வாணங்களை பார்க்க துடிக்கும் கண்களுக்கு பணங்கள் தான் முக்கியம் - நியாயங்களை , நியமங்களை அவர்களால் உணர முடியாது . அவ்வளவு கேவலமானது இந்த உலகின் '' மாமிச மனங்கள் '' யாழ் தர்மினி பத்மநாதன்
மனம் ..... இறுகிக் கொண்டே போகின்றது உன்....... இரக்கமற்ற அன்பினால் yarl.tharmini pathmanathan
உனக்காக நான் தந்து விட்டுப் போகும் சொத்து '' என் நினைவுகள் '' மட்டுமே.
அடுக்குமாடி , மாடி வீடுகளில் வீடு தெரிவு செய்வது எவ்வளவு மோசமானது என்று கடந்த ஒரு வருடமும் தெரியவில்லை .
ஏனெனில் நான் வாடகைக்கு வீடு எடுக்கும் போது மாடிகளில் வீடுகள் காலியாக இருந்தன .
சில மாதங்களாக வீட்டினுள்ளும் வாழ முடியவில்லை , வீட்டுக்கு வெளியேயும் வாழமுடியவில்லை ..
நேர காலம் இன்றி எப்போதுமே ''அலாரம்'' அடிக்கின்றது ஒவ்வொருவரினதும் '' சத்தங்கள் ''
நகரம் .........நரகம் தான் ..........
அடுக்குமாடி , மாடி வீடுகளில் வீடு தெரிவு செய்வது எவ்வளவு மோசமானது என்று கடந்த ஒரு வருடமும் தெரியவில்லை .
ஏனெனில் நான் வாடகைக்கு வீடு எடுக்கும் போது மாடிகளில் வீடுகள் காலியாக இருந்தன .
சில மாதங்களாக வீட்டினுள்ளும் வாழ முடியவில்லை , வீட்டுக்கு வெளியேயும் வாழமுடியவில்லை ..
நேர காலம் இன்றி எப்போதுமே ''அலாரம்'' அடிக்கின்றது ஒவ்வொருவரினதும் '' சத்தங்கள் ''