Sunday, October 21, 2012

வருடங்கடந்து ....21.10.2012

 பதிவை மேற்கொண்டு இரு வருடங்கள் ஆகிவிட்டது என்று நினைக்கின்றேன்
 
.
பல தடவைகள்  முயற்சி செய்தும் ஏனோ நிகழவில்லை .
 
இன்று எதிர்  பாராமல் திறக்கப்பட்டது  சந்தோசம் தான் .
 
இருந்தும் பதிவின் அமைப்பின் படத்தைப் பார்த்ததும் கவலை தான் ..
 
ஆனால் மாற்றம் செய்ய விரும்ப்பவில்லை .
 
அந்த வடிவமைப்பு படம் நண்பனும் , இன்று நண்பர்கள்  குழாத்தின் மனங்களில் நீக்கமறையாக வாழ்ந்து வரும்  அமரர் . ஆ.ரஞ்சித்  உடையது ..
 
இன்று தொடக்கம் பதிவுகள் தொடரும் என்று நினைப்பதை விட , தொடர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் .
 
ஏனெனில் என்னிடம் பல ஆவணங்கள் , , கதைகள் கட்டுரைகள் சொல்லவேண்டிய  செய்திகள் , ,புகைப்படங்கள்   என்று    ஏராளம் உண்டு .......
 
அவை   யாரோ ஒருவருக்கு  உசாத்துனையாகவும் அமையும் ,என்பதிலும்  , அனுபவ பாடமாக அமையும் என்பதிலும் மகிழ்வு வராமலா போகும் என்ன ?.
 

திருமண அழைப்பிதழ்

குடும்ப நண்பரும் , இலக்கிய கர்த்தாவும், வளரி ஆசிரியரும் , தமிழ்த்தேசிய பற்றாளருமான  அருணா சுந்தரராஜன் அவர்களின் வருகை [ இன்று  21.10.2010 மதியம் 2.00 தொடக்கம் 5.00 ]  சந்திப்பு சந்தோசமானது .  அவரது மகனின் திருமணம் வரும் 29.10.2012 அன்று  மானா மதுரையில் இனிது நிகழவுள்ளமைக்கான   அழைப்பு விடுக்கப் பட்டமை மகிழ்வு தருகிறது .