''அந்த மூன்று நாட்கள் ''
நான் எதிர்பார்ப்பதெல்லாம்
உன் அன்பையும் அரவணைப்பையும்
அந்த மூன்று நாட்கள் மட்டுமே ...
மரணத்திலிருந்து மீளுதல்
அவ்வளவு இலகுவானதல்ல
புரிதலற்ற உன்னிடம்
அந்த எதிர்பார்ப்புக் கூட
விசங்களையே
உய்ப்பிக்கின்றன
தனிமையும் வெறுமையும்
கலந்த இந்த இருட்டுலகில்
நீயற்ற வாழ்வில்-- இருந்து
நான் மீளும் காலம் வெகு
தொலைவில் இல்லை .
யாழ் .தர்மினி பத்மநாதன்
20.05.2015
No comments:
Post a Comment