வாலி வலிமையான ஆயுதம் '' வாலி வலிமையான ஆயுதம் வாலி வலிமையான ஆயுதம் மதியம் 12 மணிக்கு போரூரில் இருந்து ஆரம்பமான பயணம் . ''வடபழனி '' வழியாக '' பெசன்ட் நகர் '' நகர் போக சரியாக 2 மணி ஐந்து நிமிடம் . வழியில் கொட்டும் மழை. வாகன நெரிசல் . இருந்தும் மரண ஊர்வலம் ஒன்று வீதியால் போய்க் கொண்டு இருந்தது . இறுதி நிகழ்வு 3.30 மணிக்கு என்பதால் இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு என்று தான் நினைப்பு . வீடு போய்ச் சேர 2.30 மணி ஆகிவிட்டது . ஆனால் தெரு எங்கும் பூக்களால் அர்ச்சிக்கப்பட்டு இருந்தது . யாருமே அங்கு இல்லை . தந்தி tv மட்டும் தங்கள் வேலை முடித்து அலுவலகம் செல்ல தயாராக இருந்தார்கள் . இனி மீதமாக இருப்பது மின் சுடுகாடு தான் . ஆட்டோ பிடித்து , வாகன நெரிசல் முடித்து,சுடுகாடு போனதில் ஆறுதல் . அதன் பின் தான் ஊர்வலம் வந்து சேர்ந்தது . படைப்பாளர்கள் , பதிப்பாளர்கள், சமுகம் என்று பலரும் அங்கு கூடி இருந்தனர் . நடிகர் ராஜேஷ் , இசை அமைப்பாளர் ' சிவமணி', நடிகர் பாக்கியராஜா , மேத்தா , வைரமுத்து இப்படி பலரும் வந்திருந்தார்கள் . வந்திருந்தவர்கள் யாவரும் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல . கோவை , திண்டுக்கல் , விழுப்புரம், திண்டிவனம், ஆவடி , அம்பத்தூர் .... போன்ற தூர இடங்களில் இருந்தும் வந்துள்ளனர் . '' வாலி அவரின் வலிமையான ஆயுதத்தால் ''இந்த சமுகத்தின் மத்தியில் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கப் போகின்றார் . ஆனால் அவரின் உயிரற்ற உடலை கடைசி நிமிடமாவது பார்த்து விட்டுப் போவோம் என்று ஆசை ஆசையாக ஓடி வந்தவர்களை அவமதிப்பது எப்படி நியாயம் ?. '' வீட்டிலாவது மோகத்தைப் பாபோமுனு ஓடி வந்தேனுங்க '' அவங்க வெளியே கொண்டு போட்டானுங்கோ ....இங்காசும் பார்க்க முடியேல ...'' ஆதங்கப் பட்டாள் முத்துலட்சுமி . '' சுத்தி பார்க்கிற வரைக்கும் நடுவ வைக்கலாமுலே '' எவங்க தான் எத சரியாப் பண்ணுற னுக ...கோவையில இருந்து வந்தன். இப்படி பலரது ஆதங்கம் இது தான் . மக்கள் அஞ்சலி செய்யும் வகையில் ஒழுங்கு படுத்தப் படவில்லை . ஆளுக்கு ஆள் தலைமை தாங்கு வதாக நின்றால் யார் தலைமை தாங்குவது . ? நெருக்கடி நிலையில் முழு இடமும் ஆண்கள் தான் ஆக்கிரமித்து இருந்தார்கள். பிரபல்யமான ஒருவர் வருகின்றார் என்றதும் நிற்பவர்களையும் பார்க்காமல் தள்ளி விழுத்தி விட்டு , பிரபல்யத்தை முன் விடுபவர்களுக்கு அங்கு காத்திருந்த பெண்கள் சமுகத்தை கண் .தெரியவில்லை . மூச்சு விட முடியாத அளவுக்கு ஒன்றும் அவளவு கோடி மக்கள் அங்கு கூட வில்லை ஆயினும் எல்லாருக்கும் ஒரு வகையில் சந்தர்ப்பம் வழங்கி இருக்க வேண்டும் . '' ஸ்ரீ ரங்கத்தில் '' சுவாமி தரிசனத்துக்கு 250 ரூபா பணம் செலுத்தி விட்டு விசேட பகுதியால் சுவாமி தரிசனம் வந்தால் , சுவாமியை பார்க்க முன் துரத்தி விடுவார்கள் . அப்படி ஒரு அனுபவமும் இங்கு கிடைத்தது . இனி எப்போ , இந்த உயிர் மீண்டும் வரும் என்று யாருக்கும் தெரியாது . ஆனால் பார்க்க விரும்பும் சமுகத்தை பார்க்க விடுவது மனித .பண்பு இந்த பண்பை வாளியில் மட்டுமல்ல .............எந்த இறுதி நிகழ்வில் '' முகத்தை பார்க்க ஓடி வந்து காத்திருக்கும் '' ஒவ்வொரு மனிதத்தையும் மதியுங்கள் என்பதே இந்த பதிவின் நோக்கம் .




No comments:
Post a Comment