மழைக் கால விலங்குகள் ...
மனிதர் என்ற போர்வையில் எத்தனை விலங்குகள் இந்த சமுகத்தில் நடமாடுகின்றன என்று நினைக்கவே இந்த பூமி எதற்கு என்று கூட ஆத்திரம் வருகின்றது .
பல தடவைகள் பத்திரிகைகள் செய்தி கூறும் .
'' நடிகனின் கார் மோதி சிறுமி காயம் ''
'' வீதியால் சென்ற முதியவர் முச்சக்கர வண்டியில் மோதி காயம் ''
இப்படி பல செய்திகள் பார்த்திருப்போம் .
ஆனால் இப்படியான சம்பவங்களுக்கு மனிதத்தோல் போர்த்த விலங்குகள் தான் காரணம் என்பது தெளிவானது .
'' இன்று மாலை 5.5 நேரம் ஆலப் பாக்கம் மெயின் வீதியால் மாநகர சபைக்கு சொந்தமான குடி நீர் வண்டி சென்றது . வீதியோ எந்த வித ஒழுங்கும், இல்லாமல் மழை நிறைத்து குன்றும் , குழியும் சேறும் , சகதியும் என்று நீண்டது . ..... நான் பார்த்தும் இன்று நான்கு வருடங்களுக்கு மேலாக இதே கேவலத்தில் தான் இந்த வீதிகள் உள்ளது .
அப்படிப் பட்ட வீதியால் சாதாரண நடை பாதையால் போவது என்பது கூட எவ்வளவு சிரமம் என்பது அந்த பாதையால் போகின்றவர்களுக்கு புரியும் .
இந்த திறமையான வீதியில் [16.07.2013 ] நடந்து போகும் போது நேரம் 5.5 . குண்டு வெடித்தது போன்று பெரிய சத்தம் . காதில், தலையில் , காலில் , கையில் என்று பெரிய பெரிய கற்கள் விழுந்து கொட்டின . [ கற்களால் ஒருவர் தூக்கி எறிவது போன்ற உணர்வு ]
அம்மா ..............என்று காத்த தான் முடிந்தது . அந்த வண்டியின் பின்னால் வந்த யாவருக்கும் நடந்தது என்ன என்றும் தெரியும் . தெரிந்தும் யாருமே என்ன ஏது என்று ஒரு வார்த்தை கூட கேட்காதவர்களாக இருந்தனர் . ஆனால் பக்கத்து கடைகளில் இருந்து வேடிக்கை பார்த்தனர் .
வண்டியின் ரயர் புகைந்தது . அதன் பின் தான் நினைத்தேன் ரயர் வெடித்துள்ளது என்று .
சில வினாடிகள் உடலும் , மனமும் ஒரு நிலைக்கு வரவில்லை .
வண்டி எந்த அசைவும் இன்றி போய்க்கொண்டு இருந்தது . பக்கத்தில் ஒரு நபரிடம் சொன்னேன் போகும் குடிநீர் வண்டியை இலக்கத்தை குறித்து தாருங்கள் என்று .
அவர் சிறு தூரம் சென்று விட்டு , வண்டி போயிட்டு என்றார் .
அந்தப் பெரிய வண்டி அவளவு வேகமாக போக முடியாது என்றேன் .
எனக்கோ காலில் வீக்கம் அதிகரிக்க நடக்க முடியவில்லை . கைகளில், காலில் இரத்தம் வந்தது . கை நடுங்கியது . முகம் முழுதும் மண் பறந்து போயிருந்தது . மனம் தளரவில்லை .
வண்டியின் பின்னால் வேகமாக சென்றேன் .
சாரதியிடம் கேட்டேன்
'' வண்டிக்கு என்னாச்சு ''?
''ரயர் வெடிச்சிட்டு ''
'' வெடிச்சா அப்பிடியே விட்டு விட்டு வருவிங்களா ?
'' பக்கத்தில வாறவங்கள், போறவங்களுக்கு என்ன , எது என்று பார்க்க மாட்டிங்களா? '' என்றேன்
''அது வெடிச்சுது நான் என்ன பண்ண '' என்றான் சாரதி .
இப்படி எல்லாம் மனிதாபிமானம் பேசுகின்ற நாட்டில் எப்படி மனிதர்கள் வாழ முடியும் ?.
சாதி பேசி மனிதர்களைக் கூறு போட்டு இரத்தம் குடிக்கும் இந்த நாட்டில் '' மனிதத்தை தேடி சுழி ஓடவேண்டி இருக்கு ''

யாழ் தர்மினி பத்மநாதன்
No comments:
Post a Comment